•  

நாற்பதுக்கு மேலும் செக்ஸ் வாழ்க்கையில் நார்மலா இருக்கணுமா?

Sex After 40
 
செக்ஸ் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு பயணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கையின் எல்லையை மனதுதான் நிர்ணயிக்கிறது. இதன் பாதையும் பயணமும் போகும் வரை போகும், நீளும் வரை நீளும், இதற்கு இதுதான் முடிவு என்று எதுவும் இல்லை. இதை உணர்ந்தால் செக்ஸை சுதந்திரமாக, சவுகரியமாக, மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியும், ரசிக்க முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்க.ள

பெண்களுக்கு நாற்பதை கடந்து மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மெனோபாஸ் வந்தால் செக்ஸ் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கையே என்று கூறும் டாக்டர்கள், உணர்ச்சிகள் எங்கும் ஓடிப் போகாது, உங்களுக்குள்ளேயேதான் அது இருக்கும். அதை முன்பு போலவே நீங்கள் வெளிப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்கள்.

மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. இந்த சோர்வை நீக்கும் அருமருந்தாக செக்ஸ் செயல்படுகிறது. கணவரின் அரவணைப்பில் கிடைக்கும் ஆறுதலைப்போல எந்த வித மருந்தும் கிடையாது என்பதும் உளவியல் நிபுணர்களின் கருத்து. நாற்பதைக் கடந்தாலும் என்றும் இளமையுடன் திகழவும் மெனோபாஸுக்குப் பிந்தைய செக்ஸ் உதவுகிறதாம்.

மெனோபாஸ் வந்த பெண்களுக்கு மனஅழுத்தம் கூடுதலாக இருக்கும். எதைக்கண்டாலும் எரிச்சல் வரும் இந்த சமயத்தில் தங்களது கணவர்கள் அருகில் வந்தாலே இறுக்கமான நிலையுடன் ஒத்துழைக்கிறார்கள். அப்போதுதான் பிரச்சினை வரும். வலியுடன் கூடிய செக்ஸ் அனுபவமாக அது மாறி இருவருக்குமே மன வருத்தத்தையும், அதிருப்தியையும், எரிச்சலையும் கொடுக்கும் கசப்பான அனுபவமாக மாறிப் போய் விடுகிறது. மெனோபாஸ் வந்த பெண்கள், அதற்குப் பின்பு எப்படிப்பட்ட செக்ஸ் உறவில் ஈடுபடுவது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெற்று செக்ஸ் வாழ்க்கையை இனிமையாக தொடருவது நல்லது.

மெனோபாஸ் பருவத்தில்தான் முக்கியமாக டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாகவே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உதவுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான பெண்கள் மன ரீதியாக துவண்டு போவதால் இதை சரிவர கவனிப்பதில்லை. ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர முடியும். தேவைப்பட்டால் மன நல நிபுணர்களின் ஆலோசனைகளையும் கூட பெறலாம்.

அதேசமயம், மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதாவது இந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இல்லாமல் போய் விடும். இதனால் பெண்ணுறுப்பில் வறட்சித் தன்மை காணப்படும். இதனால் ஆர்கஸம் ஏற்படுவதில் தாமதமோ அல்லது சிரமமோ இருக்கலாம். இதனால் உறவின்போது வலி ஏற்படுவது இயற்கை. ஆனால் இதற்கும் கூட நிவாரணங்கள் உள்ளது. டாக்டர்கள் பரிந்துரைக்கும் ஜெல் அல்லது லூப்ரிகன்ட்களைப் பயன்படுத்தினால் உறவு எளிதாகும், இனிமையாகும். மேலும் நீண்ட இடைவெளி விட்டு விடாமல் தொடர்ந்து செக்ஸ் உறவை மேற்கொண்டு வந்தால் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.



English summary
Many women experience a decline in their libido when they enter their 40s; although this decline is not uncommon, or a cause for concern, all women should invest in a happy and satisfying sex life
Story first published: Monday, May 28, 2012, 16:34 [IST]

Get Notifications from Tamil Indiansutras