முதல் இரவுக்குள் நுழையும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏகப்பட்ட கனவுகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் முதல் இரவன்று எப்படி நடந்து கொள்வது என்பதில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை. இதனால் தித்திப்பாக இருக்க வேண்டிய முதல் இரவு சிலருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விடுவதுண்டு.
குறிப்பாக முதல் இரவன்று எப்படி உடை அணிந்து கொள்வது என்பதில் சில 'இலக்கணங்கள்' உள்ளன. அதைப் பின்பற்றுவது, அருமையான முதல் இரவுக்கு, இனிய உறவுக்கு உறுதுணையாக இருக்கும்.
முதல் இரவன்று ஒவ்வொரு பெண்ணும் (ஆணும் இருக்கலாம், தப்பில்லை) கவர்ச்சிகரமாக இருக்க வேண்டியது அவசியமாம். தன்னைத் தொட்டுத் தாலி கட்டிய ஆண் மகனை முதல் பார்வையிலேயே வசீகரிக்க அப்போதுதான் வசதியாக இருக்குமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்... தொடர்ந்து படித்தால் உதவியாக இருக்கும்.
செக்ஸியான உள்ளாடை
மிகவும் செக்ஸியான உள்ளாடைகளை முதல் இரவுக்காகவே பிரத்யேகமாக இப்போது தயாரிக்கிறார்கள். மார்க்கெட்டில் ஏகப்பட்டது வந்திறங்கியுள்ளது. அதைத் தேர்வு செய்து அணியுங்கள். அந்த உள்ளாடைகளைப் பார்க்கும் உங்களவருக்கு செக்ஸ் உணர்வுகள் கிளர்ந்தெழும். முதல் இரவு கிளுகிளுப்பாக அமைய இந்த உள்ளாடைகள் பேருதவியாக இருக்கும்.
முதல் இரவுக்கு வெட்கம் பொங்கும் முகத்தை பொலிவுபடுத்துவதை விட உடல் வனப்பை எடுத்துக் காட்டும் வகையிலான மெனக்கெடலே அவசியம். அதற்கு இந்த உள்ளாடைகள் முக்கியம். பார்த்தவுடன் காமத் தீயை பற்றிக் கொள்ளும் வகையில் இந்த உள்ளாடைகள் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும்.
வெள்ளை அல்லது பிங்க் நிற உள்ளாடைகள் அதிக கவர்ச்சியைக் கொடுக்குமாம். எனவே அப்படிப்பட்டதை தேர்வு செய்யுங்கள். சில ஆண்களுக்கு சிவப்பு அல்லது கருப்பு நிற உள்ளாடைகள் பிடிக்கும். எனவே உங்கள் கணவருக்கு எந்தக் கலர் பிடிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற உள்ளாடையைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
வாசணையை பரப்புங்கள்
நறுமணம் ... முதலிரவு அறைக்குள் புகுந்ததும் உங்கள் வாசனை, உங்களவரை ஈர்க்க வேண்டும். அதற்குத் அருமையான நறுமணம் கமழும் பெர்ப்யூம் உங்களுக்கு கை கொடுக்கும். நல்ல பெர்ப்யூமை தேர்வு செய்து, அதை உங்களது கழுத்தின் பின்பக்கம், தோள்பட்டை, அக்குள் போன்ற பகுதிகளில் தேவையான அளவு பயன்படுத்துங்கள்.
பெண்களுக்கு எப்படி ஆண்களின் உடல் வாசனை ரொம்பப் பிடிக்குமோ, அதேபோல ஆண்களுக்கும் பெண்களின் இயற்கையான உடல் வாசனை ரொம்பப் பிடிக்கும். எனவே அது கெட்டு விடாத வகையில் பெர்ப்யூமை அளவாக பயன்படுத்தவும்.
மஞ்சத்தில் தூவிக் கிடக்கும் மலர்களும், மங்கையின் மேனியிலிருந்து கிளம்பும் நறுமணமும் இணையும்போது உங்கள் கணவருக்கு நிச்சயம் உணர்வுகள் அருவி போல பீரிட்டெழும் என்பதில் சந்தேகமில்லை.
நைஸான நைட்டி பெஸ்ட்
முதலிரவுன்று புடவையுடன்தான் போக வேண்டும் என்பது கட்டாயமில்லை. சம்பிரதாயங்கள் என்று ஆயிரம் இருக்கலாம். ஆனால் சந்தோஷம் என்பது நமது கையில்தானே உள்ளது. எனவே முதலிரவு அறைக்குள் புகுந்ததும் சம்பிரதாய உடைகளைக் களைந்து விட்டு சந்தோஷ உடைக்கு மாறலாம். உங்கள் கணவருக்கு என்ன மாதிரியான உடையில் இரவில் தோன்றினால் பிடிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அந்த உடைக்கு மாறுங்கள்.
உள்ளே இருப்பதை அப்படியே வெளிக்காட்டும் இரவு நேர நைட்டிகள் இப்போது ஏராளம் இருக்கின்றன. அதைத் தேர்வு செய்து அணிந்து கொள்ளலாம். கணவன் மனைவி இடையே ஈர்ப்பை அதிகரிக்க வசதியான உடைகள் இப்போது நிறைய உள்ளன. பட்டன் வைத்த நைட்டி கூட உள்ளது. ஜிப் வைத்த இரவு உடைகளும் இருக்கின்றன. இப்படிப்பட்ட உடைகளை உங்கள் கணவரை விட்டே கழற்றச் சொல்லுங்கள்., அப்படிச் செய்வதன் மூலம் அவர் மட்டுமல்ல நீங்களும் கூட வேகமாக கிளர்ந்தெழ முடியும்.
இதெல்லாம் சின்னச் சின்ன டிப்ஸ்தான். நீங்கதான் புத்திசாலியாச்சே.. இதை விட சூப்பரான ஐடியா உங்களிடம் இருக்கலாம். பிறகென்ன முதலிரவை ஜமாய்ங்க...!