சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புதிய செக்ஸ் கருத்துக் கணிப்பில்தான் இப்படிக் கூறியுள்ளனர். அதாவது தொடர்ந்து ஆபாசப் படங்களை பார்த்து வரும் பெண்களின் மூளையில் உள்ள பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது பெரிதும் தடைபடுகிறதாம். இதனால் அவர்கள் பார்வைக் கோளாறு, பார்வைக் குருடு போன்ற அபாயங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளதாம்.
பார்வை மங்கல், நிறக்குருடு, மெல்ல மெல்ல பார்வை பறிபோவது ஆகியவற்றுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் ஜெர்ட் ஹோல்ஸ்டீஜ் கூறுகிறார். அதெப்படி ஆபாசப் படம் பார்த்தால் பார்வையைப் பாதிக்கும் என்று கேட்டால், ஆபாசப் படங்களைப் பார்க்கும் பெண்களுக்கு கண்ணில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒருவிதமான பதட்டம் ஏற்படுகிறது. இதனால் மூளையின் பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது.
ஆபாசப் படம் பார்க்கும்போது ஏற்படும் அதீத செக்ஸ் உணர்வுகளும், அதனால் ஏற்படும் அழுத்தமுமே இதற்குக் காரணம் என்கிறார்.
இந்த ஆய்வுக்காக 12 பேரை ஈடுபடுத்தினர். இவர்களுக்கு ஒரு கரீபிய கடல் வாழ் உயிரினங்கள் குறித்த படத்தையும், ஒரு சாதாரணமான ஆபாசப் படத்தையும், ஒரு அதி தீவிரமான ஆபாசப் படத்தையும் போட்டுக் காட்டினர்.
அப்போது அவர்களின் மூளையை பரிசோதித்தபோது, அதி தீவிரமான ஆபாசப் படத்தைப் பார்த்தபோது பெண்களின் மூளையில் உள்ள பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அடுத்த முறை படம் பார்க்க உட்காரும்போது கவனமாக இருக்க முயலுங்கள்... 'Fun' எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கண்ணும் முக்கியமாச்சே...!