உடலுறவு கொண்டால் மட்டுமே கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்ற எண்ணம் இன்னும் கூட பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை, உடலுறவு அல்லாமல் வேறு சில சமயங்களிலும் கூட கன்னித்திரை சவ்வு கிழிபடும் என்பதே உண்மை.
மேலும் கன்னித்திரை தொடர்பாக ஏகப்பட்ட கதைகள், அறியாமைச் செய்திகள் நிறையவே உலா வருகின்றன. கன்னித்திரை என்பது கணவரால் மட்டுமே கிழிபடும் என்ற எண்ணமும் கிராமப்புறங்களில் இன்னும் கூட நிலவி வருகிறது.
இருப்பினும் உண்மை என்பது வேறாகவே இருக்கிறது. கன்னித்திரை என்பது மிக மெல்லிய சவ்வாகும். முதல் முறையாக ஒரு பெண் உறவு கொள்ளும்போது இந்த சவ்வு கிழிபடுகிறது. ஆனால் அப்படித்தான் அது கிழியும் என்றில்லை, ஒரு பெண் முதல் முறையாக சுய இன்பம் அனுபவிக்கும்போது கூட இது கிழியும். கன்னித்திரை சவ்வு கிழிபடும்போது லேசாக ரத்தம் வருவது இயற்கையானதே. லேசான வலியும் கூட சிலருக்கு இருக்கலாம்.
அதேசமயம் பல பெண்களுக்கு கன்னித்திரை சவ்வு கிழியும்போது ரத்தம் வருவதில்லை. இது முதலிரவின்போது பலருக்கு பிரச்சினைகளைக் கூட கொண்டு வந்திருக்கும். ஏன் ரத்தம் வரவில்லை என்று கணவர்களுக்கு லேசான சந்தேகம் கூட வரலாம், அப்படி வந்தால் அது நிச்சயம் அறியாமை என்பதைத் தவிர வேறு ஏதுமில்லை.
கன்னித்திரை சவ்வு என்பது செக்ஸ் உறவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இறுக்கமான கன்னித்திரை என்பது செக்ஸ் உறவை மேலும் உற்சாகமாக்க உதவுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு கூடுதல் உற்சாகம், சந்தோஷம் கிடைக்கிறதாம்.
அதேசமயம் எப்போதும் கன்னித்திரை இறுக்கமாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அது கிழிபட்டே தீரும்.
உடற்பயிற்சியின்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ கன்னித்திரை கிழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது போட்டிகளுக்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போதோ கன்னித்திரை கிழிகிறதாம்.
நீச்சல் உள்ளிட்டவற்றின்போதும், இடுப்புகளை அதிகம் விரிக்கும் வகையிலான உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போதும் கன்னித்திரை சவ்வு கிழிய வாய்ப்புள்ளது.
சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு சீக்கிரமே கன்னித்திரை சவ்வு கிழிந்து விடும். ஜிம்முக்கு அடிக்கடி சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும்போதும் கன்னித்திரை சவ்வு கிழிகிறது.
கன்னித்திரை சவ்வு கிழிவது என்பதே கன்னி கழிவது என்று பலரும்- அதாவது ஆண்கள் - நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் ரொம்ப காலத்திற்கு முன்பு இருந்த பழமையான, அறியாமையுடன் கூடிய எண்ணம். ஆனால் இன்றுள்ள நிலையில் அப்படியெல்லாம் பத்தாம் பசலியாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள், ஏன், ஆண்களை விட அதிகமாகவே பெண்கள் உழைக்கிறார்கள். கடுமையாக வேலை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட புதிய சூழலில் பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது அல்லாமல் வேறு வழிகளில் கன்னித்திரை சவ்வு கிழிவது என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது என்பதே உண்மை.