•  

கர்ப்பிணி மனைவி மீது அதிக காதல் வருதா?

Men Attracted To Pregnant Women
 
மனைவி கர்ப்பமாக இருந்தாலே கணவருக்கு பெருமை பிடிபடாது. தனக்கு அப்பா புரமோசன் கொடுத்த மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். அதை விட முக்கியமான விசயம் கர்ப்பிணி மனைவியின் மீது கணவர்களுக்கு அதிக காதலும், நேசமும் ஏற்படும். இதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்புதான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

ஆண்களுக்கு கர்ப்பிணி மனைவி மீது அதிகமாக காதல் ஏற்பட அவர்கள் கூறும் காரணங்களை படியுங்களேன்.

கர்ப்பம் ஆனாலே உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் மார்பகம் பெரிதாகிவிடும். அதேபோல் உடலும் பூசினார் போல மாறிவிடும். பெண்களின் உடலியல் ரீதியான இந்த மாற்றம் ஆண்களை பெரிதும் கவர்கிறதாம்.

பொதுவாகவே பெண்கள் கொஞ்சம் கொழு கொழு வென்று குஷ்பு போல, ஹன்சிகா மெத்வானி போல இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிடும் சத்தான உணவு ஒல்லியான பெண்களைக்கூட பூசினாற்போல மாற்றிவிடும்.

டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் அனைவரையும் கவரக் காரணமே அவருடைய பூசினால் போன்ற உடல் அமைப்புதான். சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் மொபைல்போனில் அவர்கள் பார்த்த வீடியோவில் கூட கொழுக் மொழுக் பெண்கள்தான் நடனமாடிக்கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு கொழு கொழு பெண்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. கர்ப்பிணி மனைவியும் கொழுக் மொழுக் என்று இருப்பதால் அது கணவரை அதிகம் கவர காரணமாகிறது.

தற்போது 25 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் திருமணம் செய்து கொள்கின்றனர். அதனால் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பெரும்பாலான தம்பதியர் இரண்டு வருடத்திற்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு காரணம் மனைவியின் உடல் அமைப்பின் மீது ஆண்களுக்கு ஏற்படும் மோகம்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் தாய் தன் குழந்தைகளுக்கு பாலுட்டும் காட்சிதான் யு டுயூப் பில் அதிகம் காணப்பட்ட வீடியோவாக தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு கர்ப்பிணி மனைவியின் மீதும் தாய்மார்களின் மீதும், மோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

கர்ப்ப காலத்தில் குழந்தை பிறந்து பாலுட்டும் காலத்திலும் பெண்கள் அணியும் உடைகள் சற்று நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இதுவும் கணவரை கவர ஒரு காரணமாகிறதாம்.

English summary
The sagging breasts and tummy bump are always a sign of attraction? That's what most men say and fall for. To them, the extra's in the body are always a sign of vulgarity, wild and wannabe. The reason is simple, the flabby body affect the hormonal production in men.
Story first published: Friday, May 18, 2012, 10:46 [IST]

Get Notifications from Tamil Indiansutras