•  

செக்ஸ் வாழ்க்கை 'லென்த்தா' போக வேண்டுமா...?

6 Weird Things That Turn On Men
 
உன் மூஞ்சியை நான் பாக்க, என் மூஞ்சியை நீ பாக்க.. இப்படித்தான் இருக்கிறது இந்திய குடும்ப வாழ்க்கை. அதற்காக இதெல்லாம் தப்பு என்று சொல்ல முடியாது. நமது முறை இப்படித்தான், நமது வாழ்க்கை இதுதான், நமது பாரம்பரியம் இதுதான்..ஆனால் இந்த வாழ்க்கையை அவ்வப்போது ஏதாவது செய்து 'ஸ்பைசி'யாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல வாழ்க்கை 'லென்த்தா' போகும்.

செக்ஸ் விஷயத்தில் ஆண்களுக்கு எப்போதுமே 'பசி' அடங்காது. கொடுக்க கொடுக்க சாப்பிட்டுக் கொண்டே இருக்கத்தான் தோன்றும். அதை விட முக்கியமாக வெரைட்டி இருந்தால்தான் அவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். இப்படிப்பட்டவர்களை சமாளிக்க பெண்கள் ஏதாவது புதுசு புதுசாக செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் நம்மாளு ஹோட்டலுக்குப் போய் விடுவாரே... அப்படிப்பட்ட 'அடங்காப் பசி' கொண்ட ஆண்களை சமாளிக்க பெண்களுக்கான டிப்ஸ்தான் இது... !

பெண்கள் தங்களிடம் அவ்வப்போது ஏதாவது ஒரு மாற்றத்தை நடைமுறைப்படுத்தலாம். இதற்காக பெரிய லெவலில் 'ஸ்கெட்ச்' எல்லாம் போடத் தேவையில்லை. சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும் உங்களை விட்டு உங்களவர் ஒரு விநாடி கூட விலக மாட்டார்.

உள்ளாடைகளில் சொர்க்கம் காட்டுங்கள்

சாதாரண உள்ளாடைகள் மூலமே உங்களவரை ஈசியாக வளைத்துப் போடலாம். குறிப்பாக கருப்பு நிற உள்ளாடைகளுக்கு மயங்காதவர் எவருமே இல்லை. கருப்பு நிற பிரேசியர் மற்றும் பேண்டீஸை கைவசம் வைத்திருங்கள். இப்பத்தான் டிசைன் டிசைனா வந்து குவியுதே.. அவ்வப்போது அதற்கு மாறிக் கொள்ளுங்கள்.

மற்றவர் கண்களுக்கு எப்படியோ, ஆனால் ஆண்கள் கண்ணில் இந்த கருப்பு தனி கிளாமரைக் காட்டுமாம். குறிப்பாக பெண்களின் உடலை கருப்பு நிற உடைகள் அலங்கரிக்கும்போது அந்தப் பெண்கள் மீது ஆண்களுக்கு தனி மோகமே பிறக்கிறதாம். குறிப்பாக கருப்பு நிற உள்ளாடைகள் என்றால் ஆண்களுக்கு கொள்ளைப் பிரியம் ஏற்படுகிறது. அதனால் அடிக்கடி கருப்பு நிறத்திற்கு மாறினால் உங்களுக்குத்தான் நல்லது.

வெள்ளை நிறத்தில் வியக்க வையுங்கள்

கருப்புக்கு நேர்மாறான கலராக வெள்ளை இருந்தாலும், கருப்புக்கு இருக்கிற அதே ஈர்ப்பு வெள்ளைக்கும் உண்டு. அதிலும் பளீரென நமது உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற மாதிரியான வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் சேலையில் வந்தால், அப்படியே உங்களவருக்கு பாரதிராஜா படத்தில் வரும் 'பாப்பாத்தி தேவதை' போலவே தெரிவீர்கள். வெள்ளை நிற காடடன் புடவை, சில்க் சேலை என்றால் ரொம்ப உத்தமம், பார்த்தவுடன் அப்படியே உங்க 'காலடிக்கு ஷிப்ட்' ஆகிவிடுவார் வீட்டுக்காரர்.

'வெளிப்படையாக' இருங்கள்...!

அடிக்கடி இழுத்து மூடியபடி இருக்காதீர்கள். வீட்டில் நீங்களும் அவரும் மட்டுமே இருப்பதாக இருந்தால், சற்று முன்னே பின்னே இருங்கள். சேலைத் தலைப்பை அடிக்கடி இழுத்து மூடிக் கொள்ளாதீர்கள். விலகியிருந்தால் விலகியே இருக்கட்டும் - அப்பத்தான் அவர் நெருங்கி வருவார். மூடி வைத்தால் அப்புறம் அவர் ஓடிப் போய்ருவார்.

ரொம்ப லேசான, டிரான்ஸ்பரன்ட்டான சேலைகளையே வீட்டில் இருக்கும்போது அணியுங்கள். அதேபோல நைட்டி கூட 'ஜமுக்காளம்' ரேஞ்சுக்கு 'மோட்டா'வாக இருக்கக் கூடாது, 'லைட்டாக, டைட்'டாக இருந்தால் சூப்பர். பார்த்த விநாடியில் உங்காளு வெலவெலத்துப் போய்டுவார்.

பிரா வேண்டாமே...

பெண்களுக்கு அழகு எது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அழகை பூட்டி வைப்பதை பெரும்பாலான ஆண்கள் பல நேரங்களில் விரும்புவதில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் ஜில்லென்ற நைட்டியில், பிரா அணியாமல் வரும் பெண்களை ஆண்கள் அதிகம் ரசிக்கிறார்களாம். எனவே மற்ற நேரத்தில் எப்படி இருந்தாலும், இரவு நேரத்தில் மணக்க மணக்க தலையில் மல்லிகைப் பூவுடன், தழையத் தழைய நைஸான நைட்டியில், பிரா அணியாமல் அவரை அணுகுங்கள், அப்புறம் என்ன நடக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இப்படி நிறைய உள்ளது. இதுமாதிரியான சின்னச் சின்ன சில்மிஷங்களில் அதிக அக்கறை காட்டினாலே போதும் உங்களை விட்டு ஒரு கணம் கூட நகர மாட்டார் வீட்டுக்காரர்.

எப்படி, இன்னிக்கே ஆரம்பிக்கிறீங்களா...?

English summary
It is believed that men turn on very easily. But, things change once you are used to having sex with the same woman. The level of excitement slows down and this is when the woman tries special tricks to spice up her love and sex life. You can simply turn on your man by going naked in front of him or just revealing few assets, but there are few weird things that turn on men easily.
Story first published: Thursday, May 10, 2012, 17:37 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more