•  

ரொமான்ஸ் மூட் வர படுக்கையறையையும் கொஞ்சம் கவனிங்க!

Soft lighting romantic bedroom
 
படுக்கை அறை என்பது மனதிற்கு நிம்மதியும், உடலின் சோர்வையும் போக்கும் இடமாகும். அந்த இடத்தை அழகாக வைத்திருந்தால்தான் ஒரு உற்சாகம் பிறக்கும், உறவிற்கான மூடு வரும். சின்ன சின்ன அலங்காரங்கள் செய்வதோடு எந்த வித இடைஞ்சல்களும் இல்லாமல் வைத்துக்கொள்வது தாம்பத்ய உறவிற்கான நமது உற்சாகத்தை அதிகரிக்கும்.

நல்ல பூட்டா போடுங்க

பெட்ரூமோ, பாத்ரூமோ இரண்டிற்குமே தாழ்பாள் சரியில்லை என்றால் மனதிற்கு நிம்மதி இருக்காது. நம்முடைய அந்தரங்கமான விசயங்கள் யார் கண்ணிலும் பட்டுவிடுமோ என்ற பயமும் பதற்றமும் இருந்து கொண்டே இருக்கும் எனவே சரியில்லா லாக் இருந்தால் உடனடியாக சரி செய்யுங்கள். அப்பொழுதுதான் பதற்றமின்றி செயலில் இறங்கமுடியும்.

ஜன்னலுக்கு திரைகள்

படுக்கை அறை ஜன்னல்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும் சரியாக பூட்டுகிறதா? இடைவெளி எதுவும் இருக்கிறதா? வெளியில் இருந்து பார்த்தால் அறையில் உள்ளவைகள் தெரிகிறதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

படுக்கை அறை ஜன்னல் வழியாக நேரடியாக வெயில் தாக்கினால் இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரிக்கும். எனவே வெயில் உள்ளே நுழையாத அளவிற்கு திரைச்சீலைகளை போடுங்கள். மாலை நேரத்தில் லேசாக தண்ணீரில் நனைத்தும் போடலாம். அறைக்குள் குளுமையான காற்று நுழையும். அப்புறமென்ன ஏசி கூட தேவையில்லை. அறைக்குள் இயற்கையான காற்று வீச உற்சாக மூடுக்கு மாறுவீர்கள்.

பூச்சிகளை ஒழியுங்கள்

படுக்கை அறையின் முக்கிய எதிரிகள் கரப்பான் பூச்சி, கொசுதான். இரண்டும் இருந்தால் எரிச்சல்தான் வரும். எனவே பூச்சிகள் நுழையாதவாறு அறையை சுத்தமாக வைக்கவேண்டும். அப்பொழுதுதான் எந்த நேரத்தில் என்ன பூச்சி கடிக்குமோ என்ற பயமின்றி இருக்கலாம். அறையில் பூச்சி தொந்தரவுகளை தவிர்க்க நறுமணம் கமழும் பூச்சி விரட்டிகளை மாட்டி வைக்கலாம்.

படுக்கை விரிப்புகள்

படுக்கை, தலையணைகளை எப்பொழுதுமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பார்ப்பதற்கு அழுக்காக இருந்தால் உற்சாகமெல்லாம் வடிந்து விடும். எனவே வாரம் ஒருமுறையாவது படுக்கை விரிப்பு, தலையணை உறை ஆகியவைகளை துவைத்து உபயோகிக்க வேண்டும். உங்கள் படுக்கையை இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது எடுத்து வெயிலில் காயவைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதனால் அலர்ஜி ஏற்படுத்தும் பூச்சிகள் இருந்தாலும் இறந்து விடும். ஏதாவது துர்நாற்றம் வீசினாலும் மூடு ஏற்படாது. எனவே மாலை நேரத்திலேயே இதெல்லாம் செக் செய்து ரூம் ப்ரெஸ்னரை உபயோகித்து அறையை தயார் செய்யலாம்.

மிதமான வெளிச்சம்

படுக்கை அறையில் மனதிற்கும் உடலுக்கும் உறுத்தாத வெளிச்சம் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மங்கலான அந்த விளக்கு ஒளியில் காதல் விளையாட்டு விளையாட உடலும், மனமும் தயாராகும். நம்முடைய படுக்கை அறையில் உள்ள பொருட்களை வாரம் ஒரு முறை இடம் மாற்றி வைக்கலாம். இதனால் புதிதாக இருப்பது போலவோ அல்லது புதிய இடத்திற்கு சுற்றுலா சென்றிருப்பது போல காதல் உணர்வுகள் தோன்றும்.

ரொமான்ஸ் திரைப்படங்கள்

படுக்கை அறையில் டிவி இருந்தால் மனதிற்கு பிடித்த ரொமான்ஸ் திரைப்படங்கள் பார்க்கலாம். இருவர் மட்டும் தனித்திருக்கும் அந்த நேரத்தில் மனதிற்கு பிடித்த திரைப்படங்களை பார்ப்பதனால் தாம்பத்ய உறவிற்கான மூடு அதிகரிக்கும். காதலிக்கும் தருணங்களில் அல்லது திருமணமான புதிதில் வாங்கிக் கொடுத்த பரிசுப்பொருட்கள் அலாரம் போன்றவைகளை படுக்கை அறையில் அழகாக அலங்கரிப்பது தாம்பத்ய உறவிற்கான உற்சாகத்தை அதிகரிக்கும்.

English summary
If you want better sex more often you need to give your bedroom a sex makeover. Follow these five simple steps and you can sass up your sex life today.
Story first published: Saturday, May 19, 2012, 10:05 [IST]

Get Notifications from Tamil Indiansutras