உணர்வை தூண்டும் உணவுகள்
பண்டைய காலத்தில் இருந்தே திருமணம் முடிந்த புதுமண தம்பதிகளுக்கு முதல்நாள் இரவில் பால் சேர்த்த சத்தான உணவுகளை உண்ணக்கொடுப்பார்கள். இது அவர்களின் பாலுணர்வை தூண்டுவதற்காகத்தான். இதேபோல சில வருடங்களில் தாம்பத்ய வாழ்க்கை போரடிப்பது போல தோன்றினாலும் உணர்வுகளை தூண்டும் உணவுகளை உண்ணலாம், சிப்பி, தர்பூசணி, டார்க் சாக்லேட் போன்றவைகளோடு உற்சாகம் ஏற்படும் உணவுகளை இரவு நேரத்தில் சமைத்து உண்ணலாம். இரவு நேரத்தில் வெற்றிலை போடுவது கூட தாம்பத்ய உறவின் உற்சாகத்திற்காகத்தான் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் பாலுணர்வை தூண்டும் மூலிகை கசாயத்தையும் அருந்தலாம். இதனால் புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும்.
தலையணைகள்
ஆச்சரியமாக இருக்கிறதா? தாம்பத்ய உறவின் உற்சாகம் தரும் முக்கிய அம்சமாக தலையணைகள் இருக்கின்றன. எனவே உங்கள் மனதிற்கு பிடித்த வர்ணங்களில் தலையணைகளை வாங்கி படுக்கை அறையில் அலங்கரியுங்கள். அப்புறம் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் தினந்தோறும் உற்சாகம்தான்.
வேடிக்கை விளையாட்டுகள்
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆரம்பித்தாலே நாளடைவில் போரடிக்க ஆரம்பித்து விடும். எனவே வேடிக்கையான விளையாட்டுக்களால் அன்றைய இரவை தொடங்குங்கள். பேச்சும் செயலும் வித்தியாசமாக உணர்வுகளை தூண்டும் விதமாக இருக்கட்டும். இதுபோன்ற செயல்களினால் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உற்சாகம் பிறக்கும். அன்றைக்கு என்ன வேண்டும் என்பதை காலையில் அலுவலகம் செல்லும்போதோ லைட்டாக கோடிட்டு காட்டிவிட்டு போங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் துணைவி உங்களுக்காக மாலையில் தயாராக காத்திருப்பார் என்கின்றனர் நிபுணர்கள்.