•  

ரொமான்ஸ் மூடு வரலையா? சிலதை கட்டாயம் கவனிங்க!

Bad mood
 
படுக்கை அறையில் மனைவி அருகில் வந்தாலே இன்னைக்கு எனக்கு மூடு சரியில்லை என்று கூறுபவரா நீங்கள்?. மூடு எனப்படும் மனநிலையை சில காரணிகள் தீர்மாணிக்கின்றன. ஒரு சிலருக்கு வீட்டில் உள்ள பொருட்கள் கொஞ்சம் மாறுதலாக தெரிந்தாலும் கூட மூடு சரியில்லாமல் போய்விடும். அதன்பின் உறங்கும் வரைக்கும் அதே நிலையோடு இருக்க நேரிடும், பிறர்மேல் எரிச்சலும் நம்மைத்தவிர எதுவும் சரியில்லாதது போல தோன்றும் அப்புறம் எப்படி படுக்கை அறையில் சந்தோசமாக இருக்கமுடியும்.

இதோ நமது மனநிலையை மாற்றும் காரணிகள் எவை எவை என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். அவற்றை சரி செய்தாலே போதும் ரொமான்ஸ் மூடு உங்களுக்கு தானாக வரும்.

சரியில்லாத உணவு

நமது மனநிலையை தீர்மானிப்பதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. சரியில்லாத உணவை சாப்பிட்டால் அடி வயிறு வலிக்கும். இதனால் மூடு அப்செட் ஆகிவிடும். சில உணவுகளை சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும், சில உணவுகள் நரம்பு தளர்ச்சி, ஈடுபாடின்மை போன்றவைகளை ஏற்படுத்திவிடும் எனவே தினசரி படுக்கைக்குச் செல்லும் முன் நல்ல, அமைதியான மனநிலையை தரும் உணவுகளை உண்ண வேண்டும். பால் பொருட்கள் நல்ல மனநிலையை ஏற்படுத்தக்கூடியவை என்கின்றனர் நிபுணர்கள்.

வீட்டு உள் அலங்காரம்

மனதை புத்துணர்ச்சி ஏற்படுத்தி நல்ல மூடுக்கு கொண்டு வருவதில் நமது வீட்டில் உள்ள உள் அலங்காரப் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். ஊதா நிறம் மனதிற்கு அமைதியை தரும். எனவே படுக்கை அறை சுவர்களில் மனதிற்கு இதமான வர்ணங்களை பூசுங்கள். அழகான இயற்கை ஓவியங்களை மாட்டுங்கள் அதுவும் உங்களுக்கு ரொமான்ஸ் மூடு வரவைக்கும். அலுவலக மன அழுத்தம், உளைச்சல் எதுவும் இன்றி மனதை இதமாக்கும்.

பதவி உயர்வு

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்துள்ளது. பணி புரியும் ஊழியர்களிடையே பதவி உயர்வு என்பது அவர்களின் மனநிலையை தீர்மானிக்கும் விசயமாக இருக்கின்றது. நமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வேறு யாராவது தட்டிப்பறித்தாலும் நமக்கு மூடு அப்செட் ஆகிவிடும். அந்த மனநிலை குடும்பத்திலும் எதிரொலிக்கும்.

பணிப் பளு அதிகரிப்பு

ஒரு சிலருக்கு விடிய விடிய வேலை இருக்கும். எப்படா வீட்டில் போய் படுத்து தூங்குவோம் என்ற மனநிலையில் இருப்பார்கள். அந்த நேரத்தில் ரொமான்ஸ் மூடாவது ஒன்றாவது. இந்த சிக்கல்களில் இருந்து தவிர்க்க நமது பணியை பிரித்து நமக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மன அழுத்தமும், குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வெறுப்புமே ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே வைட்டமின் டி, பி வைட்டமின்களான பி6, பி12 போலேட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மன அழுத்தம் உடல் பாதிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். அப்புறம் என்ன ரொமான்ஸ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்பீர்கள்.

நண்பர்கள்

நம்ம மனநிலையை தீர்மானிப்பதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நண்பேண்டா என்று நட்பு வட்டாரத்தை கொண்டாடுபவர்கள் நண்பர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இப்பொழுது பேஸ் புக் நட்பு கூட சில சமயங்களில் நமது மூடு ஸ்பாயில் ஆக காரணமாகிறது. எனவே எதுவுமே ஒரு அளவிற்கு மேல் நம்மை பாதிக்க விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மாத்திரைகள்

உடல் நல பாதிப்பிற்காக போடப்படும் மாத்திரைகள், அதேபோல் பெண்கள் குழந்தை பிறப்பை தடுப்பதற்காக போடப்படும் மாத்திரைகள் ரொமான்ஸ் மூடினை வடிந்து போக செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கான மாற்று வழியை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புகைப்பதும் நமது மனநிலையை மாற்றும் முக்கிய காரணியாக உள்ளது இதனால் புற்றுநோய், இதயநோய் போன்றவைகளும், மனஅழுத்தமும் ஏற்படுகின்றன. எனவே நல்ல மனநிலை ஏற்பட சிகரெட் பிடிப்பதை தவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெட்ரூம் லைட்

படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் லைட் கூட நம் மனநிலையை மாற்றுமாம். அதேபோல் உறங்கும் முன்பாக அதிக நேரம் டிவி பார்ப்பது, நமது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி ரொமான்ஸ் மனநிலையை பாதிக்கச் செய்கின்றது. எனவே மனநிலையை பாதிக்கும் இந்த காரணிகளை சரியாக கையாண்டால் ரொமான்ஸ் மூடு ஏற்படுவதில் உங்களுக்கு எந்த குறையும் இல்லை.

English summary
Ever woken up in a bad mood and not known why? You may be surprised by the cause. While many things contribute to putting us in a bad mood, there are steps you can take to eliminate some common causes. Here are 10 surprising things that can spoil your mood.
Story first published: Wednesday, May 30, 2012, 9:13 [IST]

Get Notifications from Tamil Indiansutras