•  

பார்வையை ஓட விடுவதில் ஆண்களை விட பெண்களே 'லீடிங்'!

Women more likely than men to ogle
 
அழகான பெண் எதிரே வந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பது சகஜம்தான். அதேபோலத்தான் பெண்களும். ஆனால் தங்களது ஜோடிகளுடன் போகும்போது எதிர்பாலினர் மீது பார்வையை ஓட விடுவதில் பெண்கள்தான் லீடிங்கில் இருக்கிறார்களாம்.

இதை ஒரு ஆய்வு நடத்திக் கண்டுபிடித்துள்ளனர் - வேற யாரு, வழக்கம் போல வெளிநாட்டுக்காரங்கதான். சுற்றுலாத் தலங்களுக்கு ஜாலியாக டிரிப் வந்த ஜோடிகளைப் பிடித்து கருத்துக் கேட்டுள்ளனர். அதில் 56 சதவீத ஆண்கள், தங்களை கிராஸ் செய்த, தங்கள் கண்ணில் பட்ட அழகான பெண்களை சைட் அடித்ததாக ஒத்துக் கொண்டனராம்.

அதேசமயம், கிட்டத்தட்ட 74 சதவீத பெண்கள், ஆமா, சைட் அடிச்சேன் என்று ஒத்துக் கொண்டார்களாம்.

இப்படி சைட் அடித்ததாக ஒத்துக் கொண்ட பெண்களில் 77 சதவீத பெண்கள், தாங்கள் அடுத்த ஆணை சைட் அடித்ததை கணவர் பார்த்து விடாதவாறு மறைக்க முயற்சி செய்ததாக கூறினராம். இவர்கள் இதற்காக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு 'பாதுகாப்பாக' சைட் அடித்தார்களாம். அதேபோல கணவர் ஏதாவது பொருள் வாங்க 'அந்தாண்டை' நகர்ந்ததும், இவர்கள் 'இந்தாண்டை' சைட் அடித்தார்களாம்.

சில பெண்கள், தங்களை விட அழகாக இருந்த பெண்கள் மீது பார்வையை ஓட விட்டனராம். நம்ம ஆள் அவளைப் பார்த்தாரா என்றும் வேவு பார்த்துக் கொண்டார்களாம்.

இந்த கருத்துக் கணிப்பு குறித்து அதை நடத்தி நிறுவனத்தின் இணை உரிமையாளர் கிறிஸ் கிளார்க்சன் கூறுகையில், ஆணோ, பெண்ணோ, வெளியிடத்திற்குச் ஜோடியாக போகும்போது இருவருமே எதிர்பாலினரைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று என்றார்.

இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. இரு பாலினருக்கும் உணர்வுகள் ஒன்றுதானே...!

English summary
A survey has revealed that most of the women have confessed to checking out other men when they are on trips with their partners. While a total of 56 per cent of men admitted ogling other women on trips away with wives or girlfriends, 74 per cent of women on breaks with their male partner confessed to checking out other men, the poll by travel agent sunshine revealed.
Story first published: Monday, April 23, 2012, 16:08 [IST]

Get Notifications from Tamil Indiansutras