•  

'அது' முடிந்த உடனேயே தூங்கப் போயிடாதீங்க!

What Falling Asleep After Sex Might Really Mean
 
தம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிர்ஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே செக்ஸ் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

தூங்கும் கணவர்கள்

தாம்பத்ய உறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். ஆனால் காரியம் முடிந்த உடன் தூங்கப் போய்விடுவதால் பெண்கள் தனிமை அடைகின்றனர். உங்களால் தூக்கத்தை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,மெதுவாக செய்யுங்கள்.

பெண்களின் விருப்பம்

தாம்பத்ய உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் பல சிக்கல்கள் உள்ளன. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்க

பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக தாம்பத்யத்தில் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது.

தாம்பத்ய உறவிற்கு முன்னதாக பெண்ணிற்கு 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்பங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

காரியம் சாதிக்க

பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

English summary
Falling asleep right after sex is usually a sign that you just had a great session that literally put you to bed, but researchers say this tendency also increases your partner’s need for post-coital cuddling and conversation.
Story first published: Monday, April 23, 2012, 13:01 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more