வெளியே சுற்றுங்கள்
அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என இருந்தால் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு விடும். எனவே மாதம் ஒருமுறையாவது அவுட்டிங் போங்கள். அது சாதாரணமானதாக இல்லாமல் சிறப்பு வாய்ந்த்தாக இருக்கட்டும்.
காதலை வெளிப்படுத்துங்கள்
மனைவியாகவே இருந்தாலும் உங்கள் மனதில் இருப்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பது அவசியமில்லை. எனவே காதலை பூட்டி வைக்காமல் வெளிப்படுத்துங்கள். கண்களின் படும் வகையில் சின்ன சின்ன காதல் கடிதங்களை எழுதுங்கள். அவ்வப்போது பூக்களை பரிசளியுங்கள்.
பொழுது போக்குக்கு நேரம்
அலுவலகம் மட்டுமே வாழ்க்கை அல்ல. புதிதாய் ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள். அது சமையலாகவும் இருக்கலாம். நடனம், இசை என ஏதாவது புதிய பொழுது போக்கு அம்சங்களில் நீங்களும் உங்கள் துணைவியும் ஈடுபடுவது வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செலவழித்த இனிய நிமிடங்கள் குறித்த நினைவுகளை தொகுத்து புத்தகமாக்குங்கள். நீங்கள் முதலில் சந்தித்த நாட்கள். உங்கள் பசுமையான நினைவுகளை வெளிப்படுத்தும் போட்டோக்கள் என புதிய ஆல்பம் ஒன்றை தாயாரிக்கலாம். அது மனதிற்கு புத்துணர்வை அளிக்கும்.
விடுமுறை கொண்டாட்டம்
வார விடுமுறை என்பது மகிழ்ச்சிக்காகத்தான் அன்றைக்கும் அலுவலக வேலைகளை வீட்டில் எடுத்து வந்து பார்த்தால் வாழ்க்கையே போராடித்துவிடும். அன்றைய தினத்தை குடும்பத்திற்காக ஒதுக்குங்கள். வேறு எதைப்பற்றிய சிந்தனையும் வேண்டாம். தனிமையான ரெசாட்ஸ், காடுகள் அடர்ந்த மலைப்பிரதேசம் என அழைத்துச் செல்லாவிட்டாலும் பரவாயில்லை. விடுமுறை நாட்களை குடும்பத்தினரோடு குதூகலமாய் செலவழித்தாலே போதும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஷெட்யூல் போடுங்க
படுக்கையறையில் ஒரே மாதிரி இருப்பது போரடித்துவிட்டதா? புதிதாய் சில விசயங்களை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் துணைவியிடம் ஆலோசனை செய்யுங்கள்.அதேபோல் பெண்களும் தங்களுக்கு என்ன தேவையோ, எதனால் கிளற்சி ஏற்படுகிறதோ அதை மறைக்காமல் கணவரிடம் தெரிவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
அலுவலகம், குழந்தைகள் போன்ற சூழ்நிலை சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் துணைவியுடன் சந்தோசமாக இருப்பது சில நாட்கள்தான். அந்த நாளிலும் இடைஞ்சல் ஏற்பட்டால் அப்புறம் வெறுப்புதான் ஏற்படும். எனவே ஷெட்யூல் போடுங்கள். அந்த நாட்களில் எந்த வேலையையும் கமிட் செய்யாதீர்கள்.
ஆரோக்கியத்திற்கும் நேரம்
மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைய உடல் ஆரோக்கியமும் அவசியம். எனவே அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சத்தான உடலுக்கு தேவையான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். இது இல்லறவாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.
எதிர்கால திட்டம்
தம்பதியர் இருவரும் இணைந்து எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். புதியதாக வாங்கப்போகும் வீடு, புதிய கார், குழந்தைகளின் படிப்பு என எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். பட்ஜெட் போடுங்கள் அதை நோக்கிய உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும் என்கின்றனர் நிபுணர்கள். நீங்களும் இதை பின்பற்றிப் பாருங்களேன் காதல் வாழ்க்கை கசந்து போகாது.