•  

காதல் அதிகரிக்க பேசாதீங்க, தொடுங்க...!

Touches that lock down love
 
ஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம்.

காதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலம் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு தொடுதல் பல ஆயிரம் காதல் உணர்வுகளை ஒரு சேரத் தருகிறதாம். மேலும் தொடுதல் மூலம் உணர்வுகள் அதிகரித்து, உறவுகளும் வலுப்பட உதவுகிறதாம்.

இதுகுறித்து ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உங்களது ஆண் நண்பர்களையோ அல்லது பெண் தோழிகளையோ உரிய இடத்தில் தொடுவதன் மூலம் நீங்கள் நினைப்பதை அடைய முடியும். அவர்களுக்கு உணர்ச்சிகள் விரைவாக தூண்டப்படும். மேலும் உங்களின் உறவுகளும் வலுப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு தொட்டால் என்னென உணர்வுகள் வரும் என்பதையும் இவர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணத்திற்கு காதலனோ அல்லது காதலியோ பதட்டம் அல்லது டென்ஷனாக இருக்கிறார்கள் என்றால், அவர்களின் காது மடல்களை வருடலாம். உங்களது ஆள்காட்டி மற்றும் பெருவிரலால் வருடுவது நல்ல ரிசல்ட் கொடுக்குமாம். லேசாக நாவால் வருடுவது, வலிக்காமல் கடிப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

காது மடல்கள் மென்மையான, உணர்ச்சிகளை விரைந்து தூண்டக்கூடிய நரம்புகளால் ஆனது என்பதால் காது மடல்களை லேசாக வருடினாலே மனம் அமைதியைடயும், கிளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. உறவுகளின்போதும் கூட இதுபோன்ற காது மடல் மசாஜ் நல்ல பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல காதுகளுக்கு அருகில் மென்மையாக முனுமுனுப்பதும், கிசுகிசுப்பதும் கூட உடனடி பலனைத் தருமாம். குறிப்பாக ரொமான்டிக்காக பேசுவது இன்ஸ்டன்ட் பலன் தருமாம். இப்படிப் பேசுவதன் மூலம் நமது மூச்சுக்காற்று, காதுகளை உரசுகிறது. அந்தத் தொடுதலும் சுகம் தரும் என்கிறது இந்த ஆய்வு.

அதேபோல காதலன் அல்லது காதலியுடன் பேசுவதாக இருந்தால் பக்கத்தில் உட்கார்ந்து பேசாமல் மடியில் அமர்ந்தபடி பேசலாமாம். இது இருவருக்குள்ளும் கை விளையாடல்களை தானாகவே ஊக்குவிக்குமாம். இதுவும் உணர்ச்சிவசப்படுதலை தூண்டுவிக்கும் ஒரு தொடுதல் நடவடிக்கை என்கிறது ஆய்வு.

இப்படி சின்னச் சின்ன தொடுதல்கள் மூலம் காதல் உணர்வுகள் தூண்டப்பட்டு இருவருக்குள்ளும் உறவுகள் வலுப்படும், காதல் ஆழமாகும் என்று முடிக்கிறது அந்த ஸ்வீடன் நாட்டு ஆய்வு.

English summary
According to the latest scientific research, one of the keys to a super happy relationship is giving not just good talk...but good touch. A recent study revealed that touch can express specific feelings (such as love), and new research from Sweden discovered that a physical caress activates the brain’s Aemotional area of the person being stroked.
Story first published: Sunday, April 29, 2012, 16:53 [IST]

Get Notifications from Tamil Indiansutras