•  

'ராத்திரி' என்ன நடந்துச்சுன்னு தெரியலையா?.. அப்படீன்னா உங்களுக்கு 'செக்ஸோம்னியா'!

Sexomnia
 
ராத்திரி என்ன நடந்துச்சு? கனவா? இல்லை நிஜமா என்று தம்பதியர்கள் அடிக்கடி கேட்டுக்கொள்கின்றனரா? அப்படியெனில் அது செக்சோம்னியா என்கின்றனர் மருத்துவ உலகினர். உறக்க நிலையில் தம்மையறியாமல் ஏற்படும் செக்ஸ் உணர்வால் ஏற்படும் தாம்பத்ய உறவையே இவ்வாறு அழைக்கின்றனர். உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கு ஏற்படும் ஒருவித குறைபாடு இது. இத்தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம்னியா குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய இந்த ஆய்வு!

நினைவே இருக்காது

செக்சோம்னியா குறைபாட்டினால்பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் 11% என்றும் பெண்கள் 4% என்றும் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். கனடாவில் உள்ள டொரான்டோ சுகாதாரப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல்துறை பேராசியர் ஷேரான் ஏ சங் தலைமையில் இது தொடர்பான ஆய்வு நடைபெற்றது. உறக்கக் குறைபாடுள்ள சுமார் 832 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

பாராசோம்னியா வகையினுள் அடங்கும் செக்சோம்னியா, தூங்கத்தொடங்கும்போது, தூங்கும்போது அல்லது விழிப்பதற்க்கு சற்றுமுன் என பலவேறு கால நிலைகளில் ஏற்படுகிறது என்கிறது ஷேரானின் இந்த ஆய்வு!. இத்தகைய உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, உறவில் ஈடுபட்டு துணை சொல்லும்வரை உறவுவைத்துக்கொண்ட நினைவே இருப்பதில்லை என்கிறார் ஆய்வாளர் ஷேரான் ஏ சங்!.

மன உளைச்சல்

பொதுவாக குழப்பமான நிலையிலுள்ளபோதும், தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தில் நடக்கும்போதும் செக்சோம்னியா குறைபாடு ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஷேரான்!

இக்குறைபாடுள்ள நோயாளிகள் உறக்க குறைபாடுகளின் மற்ற தொந்தரவுகளிலிருந்தும் தப்புவதில்லையாம். உதாரணத்துக்கு, மன உளைச்சல், உடல் அசதி மற்றும் உறக்கமின்மை போன்றவற்றையும் ஏற்படுகிறதாம்.

இம்முடிவில் முன்வைக்கப்படும் அதிகபட்ச(8 %) என்பது உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கே! ஆனால், பொதுமக்களுக்களை இக்குறைபாடு குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிக்கக்கூடும் என்கிறார் ஷேரான்!.

போதைப்பழக்கம்

இவ்வினோதமான குறைபாட்டுக்குக்கான அறிவியல்பூர்வமான காரணம் குறித்து சோதனை செய்ததில் 15.9 % செக்சோம்னியா நோயாளிகள் போதைப்பழக்கம் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது! மேலும், செக்சோம்னியா நோயாளிகள், தங்களின் இவ்வினோதமான செக்ஸ் அனுபவத்தை மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூச்சப்பட்டு, மறைத்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது!.



English summary
Sexomnia is classified as a parasomnia, a not rapid eye movement disorder, characterized by partial arousals during the sleep time. In these arousals the subject acts like having sexual activity. People who suffer it may give a moaning Kama Sutra show.
Story first published: Wednesday, April 25, 2012, 11:29 [IST]

Get Notifications from Tamil Indiansutras