உறவின் போது உச்சக்கட்டம் என்பது பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்! இதனைத்தான் ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள்.
அனார்கஸ்மியா குறைபாடு
உறவில் ஈடுபடும் அனைவருக்குமே ஆர்கஸத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், இது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆரம்பம் நன்றாக அமைந்து கிளைமாக்ஸ் சரியில்லை என்றால் எதையோ இழந்த உணர்ந்த உடனே காணப்படுகின்றனர் தம்பதியர்.
குறிப்பாக பெண்களுக்கு ஆர்கஸம் என்ற நிலை எட்டப்படவில்லை எனில் எரிச்சல், மன அழுத்தம் போன்றவை கூட ஏற்படுகிறதாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!
வாழ்க்கைத்தரம் பாதிக்கும்.
அனார்கஸ்மியா குறைபாடு ஒருவரின் வாழ்க்கைத்தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!
கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட்டினால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்! காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திறமையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என்பதே.
உளவியல் விஞ்ஞானி இஷக் தலைமையில் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. மேலும் நான்கில் ஒரு பெண்ணுக்கு பகல்கனவாகவே இருக்கும் ஆர்கஸம் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வுகளும் போதவில்லை என்று தெரியவந்துள்ளது!
101 ஆய்வுகள், முடிவுகள்
பெண்களின் ஆர்கஸம் குறைபாடு குறித்து இதுவரை நடத்தப்பட்ட 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையான உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பதற்க்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்!
உளவியல் சிகிச்சை
ஆர்கஸம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், ஆர்கஸத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!. தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமுதாயத்தை உருவாக்க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்று கூறியுள்ளார் ஆய்வாளர் இஷக்!!