அன்பின் வெளிப்பாடு
முத்தம் என்பது உதட்டோடு தொடர்புடையது மட்டுமல்ல அது, கண்கள், வாய், பற்கள், தொண்டை ஆகியவற்றோடு தொடர்புடையது. மென்மையாக கசியும் இசையைப் போல இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உங்கள் துணையின் முகத்தை கைகளால் பற்றி உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
கண்களால் உணர்த்துங்கள்
முத்தமிடப்போவதை முதலில் கண்களால் உணர்த்துங்கள். அதில் நிகழும் ரசாயன மாற்றத்திலேயே உங்கள் துணை தயாராகிவிடுவார். முத்தமிடுவதில் கூட கிரியேட்டிவிட்டி இருக்க வேண்டும். கற்பனைத் திறனைப் பயன்படுத்தி ஆழமாக முத்தமிடவேண்டும் என்கின்றர் நிபுணர்கள். முத்தம் என்பது 30 நொடிகள் வரை நீடிக்கலாம் அதுவே சிறந்த முத்தம் என்கின்றனர்.
உதட்டில் காயம்
முத்தமிடுகிறேன் என்று உதட்டை காயப்படுத்தி விடவேண்டாம். அப்புறம் முத்தத்தைப் பற்றி உங்கள் துணை நினைத்துக்கூட பார்க்க மாட்டார். உதடு என்பது மென்மையான பகுதி அதற்கேற்ப சக்தியை மட்டுமே செலவழித்து அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
பற்களோடு தொடர்பு
முத்தமிடும்போடு பற்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுகிறது. பற்களுக்கு இடையே பாதிப்பு ஏற்படாமல் முத்தமிடவேண்டும். முத்தமிடுவதற்கு முன்பு ஹோம் ஒர்க் செய்து கொள்ளுங்களேன்.
உதட்டோடு உரசல்
உதட்டின் நடுப்பகுதியில் முத்தமிடுவதே சிறந்த முத்தம் என்கின்றனர் நிபுணர்கள். எந்த வித அழுத்தமும் இன்றி முத்தமிடவேண்டும். சரியான லிப் லாக் என்பது ஒருவருக்கொருவர் உணர்ந்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். மென்மையாக முத்தமிட்டு காதலை வெளிப்படுத்த வேண்டும்.
உங்க முத்தம் எப்படிப்பட்டது அன்பை வெளிப்படுத்துமா? காயப்படுத்துமா?