தாம்பத்ய உறவில் சிக்கல் எழுவதற்குக் காரணம் பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பு குறையத் தொடங்குவதே காரணமாகும். வறட்சியும், வலியும் ஏற்படுவதால் பெண்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் உறவில் ஈடுபட ஆர்வம் இருப்பதில்லை.
ஊட்டச்சத்துள்ள உணவுகளின் மூலமும் மனதை உற்சாகமாக வைத்திருப்பதன் மூலம் தாம்பத்ய உறவில் உற்சாகமாக ஈடுபடமுடியும் என்கின்றனர் மனநல நிபுணர்கள். தினசரி உடற்பயிற்சியும், தியானம் போன்றவையும் ஹார்மோனை சரியான அளவு சுரக்கச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். ஹார்மோன் மாற்று தெரபியும் பலன் தரக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள்
உடற்பயிற்சி
தினசரி காலை, மாலை நேரங்களில் தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான அளவு ரத்த ஓட்டம் கிடைக்கும். பாலுணர்வு உறுப்புகள் உற்சாகமடையும். மூளையும் சரியான அளவு ரசாயனத்தை சுரந்து பாலுணர்வை ஊக்குவிக்கும்.
சாக்லேட் சாப்பிடுங்க
மெனோபாஸ் பருவத்தில் உள்ள பெண்கள் டார்க் சாக்லேட் சாப்பிடுங்க. அது சரியான அளவு ரசாயனத்தை சுரப்பதோடு காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.
வெள்ளரிக்காய் சாலட் தயாரித்து சாப்பிடுவதன் மூலம் பெண்களின் காதல் உணர்வுகள் அதிகரிக்கும் என்று சிகாகோவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தை நீக்குங்கள்
அதிக அளவு மன அழுத்தம் இருந்தாலும் உறவில் ஈடுபட உற்சாகம் இருக்காது. எனவே முதலில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள். காதல் உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்யுங்கள்.
வெளியூர் செல்லுங்கள்
உங்கள் துணைவருடன் வெளியூர் செல்லுங்கள். இது உங்களுக்கு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். புதிய இடம், புதிய சூழ்நிலை உங்களின் காதல் உணர்வுகளை தூண்டிவிடும்.
இயற்கை ஸ்பா
உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் வகையில் ஒரு நீராவிக் குளியல் போடுங்களேன். அப்புறம் பாருங்கள் மன அழுத்தமாவது ஒன்றாவது. உற்சாகமாய் உணர்வீர்கள்.