•  

இடுப்புக்கு உடற்பயிற்சி செய்தால் 'ஆர்கஸம்' ஈசியா இருக்கும்!

Orgasm
 
தாம்பத்ய உறவின் போது உண்டாகும் உச்சபட்ச இன்பம் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்கஸம் எனப்படும் உச்சபட்ச இன்பம் பெண்களுக்கு ஏற்படும் டென்சனை குறைக்கிறது. இது இதயத்துடிப்பை அதிகரிப்பதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தம் சென்றடைகிறது. நரம்பு தொடர்பான நோய்கள் எதுவும் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இடுப்பிற்கு உடற்பயிற்சி

ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய, தாம்பத்ய உறவின் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பது எளிதாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு குறிப்பாக இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், தாம்பத்ய உறவின்போது இன்பம் அனுபவிப்பது கூடுதலாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது தாம்பத்ய வாழ்க்கையில் பல பிரமிக்கத்தக மாற்றங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.

மனதை லேசாக்குங்கள்

உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். நாம் உறவு வைத்துக்கொள்ளும் இடமும் அதேபோல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும். அதை விட்டு விட்டு கிடைக்கிற இடத்தில் என்று போய் விட்டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் செய்து விடலாம்.

உறவுக்கு முன்பாக நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.

கவனம் சிதறவேண்டாம்

உறவின்போது உங்களது கவனம் சிதறக்கூடாது. அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவனம் முழுக்க உறவிலேயே இருக்கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.

உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசியம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், உரசல்கள் உங்களுக்குள் இருந்தால் மகிழ்ச்சியான தாம்பத்ய உறவை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary
An Orgasm is Good For You! Orgasms relieve tension! The faster heartbeat, the increased blood flow and the muscular tautness associated with sexual pleasure all come to a relaxing conclusion with an orgasm, and in the process relieve tensions pent up in your nervous system.
Story first published: Monday, April 9, 2012, 15:06 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more