போர்னோகிராபி எனப்படும் ஆபாச படங்கள் அடங்கிய வலைப் பக்கங்கள் தான் இன்றைக்கு பல மில்லியன் பேர் இணையதளங்களில் பார்க்கும் பக்கமாக உள்ளது. இலவசமாகமாகவும், பலரும் பரிமாறிக்கொள்ளும் வகையிலும் போர்னோகிராபி படங்கள் வெளியாகின்றன. இந்த வலைப்பங்களை இளைஞர்களும், சிறுவர்களும்தான் அதிக அளவில் பார்வையிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் மீது வன்முறை
கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் இணையத்தில் 1,500% அதிகரித்துள்ளது. இன்றைய அளவில் ஒரு இலட்சம் சிறுவர் போர்னோகிராபி தளங்கள் இணையத்தில் உள்ளன, வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும். ஆன்லைன் சிறுவர் போர்னோகிராபி ஒரு மல்ட்டி பில்லியின் டாலர் வியாபாரம், இது ஆன்லைன் இசை விற்பனையை விட பல மடங்கு அதிகம்.
சிறுவர் போர்னோகிராபி தளங்களில் ஒரு நாளைக்கு இருபதாயிரம் சிறுவர்கள் வரை காண்பிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் ஐந்து வரையான புதிய சிறுவர்கள் வருகின்றனர். சிறுவர் போர்னோகிராபியில் பயன்படுத்தப்படுபவர்களின் சராசரி வயது ஒன்பது மூன்று வயதிற்கு குறைந்த குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு.
மன அழுத்தம் அதிகரிக்கும்
போர்னோகிராபி படங்களை பார்ப்பதன் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கிறது என்கின்றது ஒரு ஆய்வு முடிவு. இந்த படங்களை பார்ப்பவர்களால் இயல்பாக யாருடனும் பழக முடியாது இதனால் ஆரோக்கிய குறைபாடும் ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் ஏற்படும் மன உளைச்சல் ஆண்களின் குடும்ப வாழ்க்கையையே அடியோடு சாய்த்து விடும் என்று அச்சுறுத்துகின்றனர் உளவியல் நிபுணர்கள்.
இதுபோன்ற வலைத்தளங்களுக்கு அடிமையானவர்களுக்கு சமூகத்தில் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படும். பெண்களிடையே மதிப்பு குறைபாடும் ஏற்படும் என்கின்றனர். மனிதர்களின் உணர்வுகளின் மீது திணிக்கப்படும் இந்த படங்களினால் மனிதர்களின் இயல்புத்தன்மை பறிபோவதோடு தாம்பத்ய உறவில் ஒரு எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
சுய கட்டுப்பாடு அவசியம்
போர்னோகிராபி தளங்களை பார்க்காமல் தவிர்ப்பதன் மூலம் ஆண்களின் விந்தணு பாதிப்பு குறைபாடு தவிர்க்கப்படுகிறது. சமூகத்தில் உள்ளவர்களுடன் சகஜமாக பழக முடிகிறது. ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை அமைகிறது.
செக்ஸ் தொடர்பான பிரச்சினைக்களில் இருந்து விடுபட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது. மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
போர்னோ கிராபி படங்களை வெளியிடும் வலைத்தளத்திற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக ஆர்வர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பெண்கள் அமைப்புகளும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் புதிது புதிதாக புற்றீசல்போல எண்ணற்ற போர்னோகிராபி வலைத்தளங்கள் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இன்றைய இளைய தலைமுறையினர் போர்னோகிராபி வலைத்தளங்களுக்கு அடிமையாகாமல், சுயகட்டுப்பாட்டோடு தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.