•  

படுக்கையறையில் கட்டுப்படுங்கள்!- கை மேல் பலன் கிடைக்கும்!!

First Night
 
இருமனங்கள் இணையும் திருமண விழாவில் புதுமணத்தம்பதிகள் ஆர்வத்துடன் காத்திருப்பது அன்றைய இரவுப் பொழுதிற்காகத்தான். இருவருக்குமே முதல் இரவினைப் பற்றி எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் ஏகப்பட்ட கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், அறைக்குள் நுழையும் ஆணை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைத்து பெண்கள் செய்யும் சில செயல்கள்தான் அப்செட் செய்வதுபோல மாறிவிடுமாம். எனவே பெண்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

எல்லாம் தெரிஞ்சவங்களா?

முதல்நாளன்றே உங்களின் திறமையை வெளிப்படுத்தவேண்டாம். அது துணைவருக்கு அச்சத்தையும், ஒருவித சந்தேகத்தையும் ஏற்படுத்திவிடும். என்னதான் நடக்கிறது என்று கவனியுங்கள். இப்படியில்லை, அதுமாதிரி வேண்டாம் என்ற ஆலோசனையும் கூடாதாம். முதல்நாளே அட்வைஸ் செய்வது, இதுமாதிரி விசயங்களில் ஐடியா சொல்வது ஆண்களின் ஈகோவை தூண்டிவிடுவது போல் ஆகிவிடுமாம். எனவே பெண்களே, தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ள வேண்டாம். அது வாழ்க்கை பயணத்தை சிக்கலின்றி தொடர உதவும். இல்லையென்றால் முதல்நாளன்று ஆர்வக்கோளறில் செய்யும் செயல் வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியான சிக்கல்களை உருவாக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

பழைய கதை வேண்டாம்

முதல் நாளன்றே தன்னைப் பற்றி முழுவதுமாக தன் கணவர் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தைப் பற்றி கணவருக்கு சொல்ல நினைக்க கூடாதாம். அது உங்கள் மீது கசப்பு உணர்வுகளைத்தான் ஏற்படுத்துமாம். எனவே திருமண நாளன்று காலையில் தொடங்கி இரவு வரை அலுத்து, சலித்து வந்திருக்கும் ஆணிடம் பழைய கதை பேசி போராடிப்பது திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளவேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஓவர் வெட்கப் படாதீங்க

முதன் முதலாக திடீரென்று ஒரு ஆணுடன் படுக்கை அறைக்குள் தனித்து விடப்படும்போது அச்சம், வெட்கம் பெண்ணுக்கு ஏற்படுவது இயல்பானதுதான். அதற்காக எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் ஆணுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. அது புதிதாய் வாழ்க்கையை தொடங்க நினைக்கும் கணவருக்கு மூட் அப்செட் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொஞ்சமே, கொஞ்சம் வெட்கத்தை தளர்த்திக் கொள்ளலாம்.

கட்டுப்படுங்கள்

அது தொடர்பான புத்தகம் படித்தோ, வீடியோ பார்த்திருந்தோ பெண்களுக்கும் ஓரளவிற்கு விபரம் தெரிந்திருந்தாலும் முதல்நாள் இரவு ஆணின் ஆளுமைக்கு கீழ் கட்டுப்படவேண்டும். அதைத்தான் பெரும்பாலான ஆண்களும் எதிர்பார்ப்பார்கள். முதல் இரவில் மெல்லியதாய் ஒரு வெட்கம். இதமான ஒரு நடுக்கத்துடன் அணுகும் பெண்களைத்தான் ஆணுக்குப் பிடிக்குமாம். அதை விடுத்து தன்னுடைய கட்டுப்பாட்டில் ஆணை கொண்டுவரவேண்டும் என்று நினைக்கும் பெண்களைக் கண்டு ஆண்கள் மிரட்சியடைகின்றனராம்.

எனவே இதுபோன்ற தவறுகளை முதல்நாளன்று செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் ஆலோசனையாகும்.English summary
Wedding night is very special for the newlywed couple. Both plan to make the night loving and special by planning! Although you are prepared to face the wedding or first night with your newly wedded wife, you should know how to impress her and make the night erotic! Taking a wrong step just to impress your partner can bring down your impression easily.
Story first published: Wednesday, March 7, 2012, 11:27 [IST]

Get Notifications from Tamil Indiansutras