•  

முதல்நாள் இரவில் பேசி புரிஞ்சுக்கங்க !

Wedding Night Secrets
 
திருமண நாளன்று புதுமணத் தம்பதிகள் இருவருக்குமே ஒருவித படபடப்பும், எதிர் பார்ப்பும் இருக்கும். அன்றைய இரவில் எப்படி நடந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குமே இருக்கும். ஆணை விட பெண்ணுக்குத்தான் பயம் அதிகம் இருக்கும். உளவியல் ரீதியான சிக்கல்களும் எழும். எனவே திருமண நாளன்று இரவில் மணப்பெண் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

இடத்தை தீர்மானியுங்கள்

திருமண நாளன்று முதலிரவு நடக்கப்போகும் இடம் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். திருமண சத்திரமா? ஹோட்டலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் படபடப்பை ஏற்படுத்தும் என்றால் உங்களுக்கு சவுகரியமான இடத்தை தேர்ந்தெடுங்கள்.

மருத்துவரிடம் ஆலோசனை

அன்றைய தினத்தில் மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரை ஆலோசனை கேளுங்கள். நீங்களாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மனித உடலைப் பற்றியும், தாம்பத்ய உறவு பற்றியும் சந்தேகங்கள் இருந்தால் அதற்கேற்ப நல்ல புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால், பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.

அதிகம் சாப்பிடவேண்டாம்

இரவு நேரத்தில் அதிகம் சாப்பிட வேண்டாம். முடிந்தவரை அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடவும். அறைக்கு செல்லும் முன் நன்றாக குளித்து விட்டு மிதமான மேக் அப் போட்டு கொள்ளவும்.

மெல்லிய நகைகள்

குறைவான நகைகளை அணியவும், கூரிய முனைகள் கொண்டதும், கனமான கற்கள் கொண்ட நகைகளை அணிய வேண்டாம். உடலை உறுத்தாத ஆடைகளை அணியுங்கள். கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

வாசனை திரவியம்

உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.
காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியம் தடவிக் கொள்ளுங்கள்.

பேசி புரிந்து கொள்ளுங்கள்

முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள். முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி ஏற்படலாம். அதைப்பற்றி அச்சம் கொள்ளாமல் வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

முதல் நாளே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் .

மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமான இரவுகளை எதிர்கொள்ளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

English summary
Wedding nights determine the value and level of intimacy the couple are about to share for rest of their lives. So start it on a comfortable note. The mantra is to understand and accept the uniqueness of each other. This night marks the beginning of your life together as husband and wife and has a lot of importance attached to it being a successful affair.
Story first published: Friday, March 9, 2012, 15:55 [IST]

Get Notifications from Tamil Indiansutras