•  

40 வயதிலும் நலமான தாம்பத்ய வாழ்க்கைக்கு...

Sex Drive
 
மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் தாம்பத்ய வாழ்க்கை இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று பெண்கள் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடையும், சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து.

மருந்தாகும் தாம்பத்யம்

மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அந்த சோர்வை விரட்டுவதற்கு தாம்பத்ய உறவானது அருமருந்தாக பயன்படுகிறது என்பதே உண்மை. புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து நல்லபடியாக நாம் செயல்பட, நல்ல எழுச்சியுடன் மனம் திகழ செக்ஸ் அவசியம் என்பது மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து. மேலும் நம்மை என்றும் போல இளமையுடன் திகழவும் மெனோபாஸுக்குப் பிந்தைய செக்ஸ் உதவுகிறதாம்.

உணர்வுகள் அதிகரிக்கும்

மெனோபாஸ் வந்தால் செக்ஸ் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கைதான் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த சமயத்தில் டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாகவே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உதவுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான பெண்கள் மன ரீதியாக துவண்டு போவதால் இதை சரிவர கவனிப்பதில்லை. எனவே உள்ளுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை முன்பு போலவே நீங்கள் வெளிப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்கள்.

வலியால் பிரச்சினை

மெனோபாஸ் வந்த பெண்களுக்கு இனி எதற்கு தாம்பத்ய உறவு என்ற மன ரீதியான முடிவுக்கு வந்து விடுவதால், தங்களது கணவர்கள் அருகில் வந்தாலே இறுக்கமான நிலையுடன் ஒத்துழைக்கிறார்கள். அப்போதுதான் பிரச்சினை வரும். வலியுடன் கூடிய அனுபவமாக அது மாறி இருவருக்குமே மன வருத்தத்தையும், அதிருப்தியையும், எரிச்சலையும் கொடுக்கும் கசப்பான அனுபவமாக மாறிப் போய் விடுகிறது.

மருத்துவர்கள் ஆலோசனை

மெனோபாஸ் வந்த பெண்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். எப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெற்று செக்ஸ் வாழ்க்கையை இனிமையாக தொடருவது நல்லது. தேவைப்பட்டால் மன நல நிபுணர்களின் ஆலோசனைகளையும் கூட பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அப்புறம் என்ன செகன்ட் இன்னிங்ஸ்சை மகிழ்ச்சிகரமாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதை புரிந்து செயல்படுங்கள்.English summary
We are all driven by chemicals in our bodies known as hormones, but when women naturally start to lose some of them, sex drive can be one of the first things to go. Sexual health expert, says as women enter their late thirties and forties, hormone levels, like testosterone, fall.
Story first published: Friday, March 16, 2012, 14:58 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more