•  

காதலும் நேசமும் கலந்த வாழ்க்கை...!

Lovers
 
மனித வாழ்க்கையில் வசந்தத்தை வரவழைப்பது காதலும், காதலிக்கப் படுவதும்தான். காதலும், ரொமான்ஸ்சும் இல்லையென்றால் மனித வாழ்க்கைப் புத்தகத்தில் இருண்ட பக்கங்கள்தான் அதிகம் இருக்கும். காதல் வேறு, ரொமான்ஸ் வேறா? என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆம் நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! இரண்டும் வெவ்வேறுதான் என்று கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள். ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது வியப்பூட்டும் செய்தி.

காதல் – ரொமான்ஸ்

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் ‘பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விடலாம். இதனை ‘ப்ளடானிக் லவ்’ (Platonic love) என்று சொல்வார்கள்.

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

உயிர்ப்பான காதல்

ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் சந்தோசமாக வாழும் கணவன் – மனைவி உறவு மேம்பட, இந்த ரொமான்ஸ் அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவியை மகிழ்விக்க வேண்டும். எதிர்பாராத இந்த முத்தமும் பாராட்டும் தம்பதியரிடையே காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மூன்றுவகை மனிதர்கள்

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதாவது ‘நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள் முதல்வகை.

இரண்டு வகை மனிதர்கள் ‘நான் சரியில்லை, நீ சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.

மூன்றாவது வகை மனிதர்களோ ‘நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை’ என்று நினைப்பவர்கள்.

காதலும் நேசமும் அவசியம்

இதில் அதிகம் பிரச்சினைகள் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்… முதல் வகைதான். ‘நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா’ என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள். இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும். எனவே தம்பதியர் இடையே காதலும், நேசமும் கலந்து இருப்பதோடு அவ்வப்போது ரொமான்ஸ் அவசியம் என்பது உளவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.

English summary
Romance is the feelings to get at the beginning of love, the fuzzy feeling in your spine and the butterflies in your stomache and the complete perfectness of the day or night. Love is a shared feeling of compassion, closeness, trust, companionship, and other feelings shared by a couple who wants to last in a relationship or marriage.
Story first published: Friday, March 2, 2012, 17:43 [IST]

Get Notifications from Tamil Indiansutras