•  

தினசரி எத்தனை முத்தம் கொடுக்கறீங்க?

Fun Facts About Kissing
 
அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம் முத்தம். முத்தத்திற்கு முடிவு இல்லை என்கின்றனர் காதலர்கள். சிறியதோ பெரியதோ முத்தம் வெளிப்படுத்தும் உண்மை ஒன்றுதான் அது அன்பின் மொழி. காதலில் முத்தத்தின் பங்கு முக்கியமானது. முத்தமிடுவதன் மூலம் உடலின் தேவையற்ற கலோரி எரிக்கப்படுகிறது என்கிறது மருத்துவ உண்மை. முத்தம் பற்றி நிலவும் வேடிக்கையான உண்மைகளை தெரிந்து கொள்ளுங்களேன்.

கண்களை மூடியபடி

ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதால். எனவே தினசரி தம்பதியர் முத்தமிட்டுக்கொள்ளுங்கள் ஜிம்முக்கு போகவேண்டிய அவசியமில்லை.

முத்தமிடும்போது 37 சதவிகித ஆண்கள் மட்டுமே கண்களை திறந்த படி துணைக்கு முத்தமிடுகின்றனராம். 63 சதவிகித ஆண்கள் கண்களை மூடிக்கொண்டுதான் முத்தமிடுகின்றனராம். முத்தத்தை அதை கற்பனை செய்து படமாக கற்பனை செய்து பார்க்கின்றனராம்.

முகச் சுருக்கம் போகும்

முத்தமிடுவதன் மூலம் முகத்தில் நரம்புகள் உற்சாகமடைகின்றன. இது பேஷியல் மசாஜ் செய்வதைப் போல சக்தி வாய்ந்தது. இதனால் முகச்சுருக்கம் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஒரே மாதிரி ஸ்டைல்

தன்னைப் போலவே ஹேர் கலர், கொண்ட ஸ்டைலை விரும்பும் துணையின் உதட்டில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மையோர் விரும்புகின்றனராம்.

மூக்கில் முத்தம்

எகிப்தியர்கள் உதட்டில் முத்தமிட விரும்புவதில்லை அதற்கு பதிலாக மூக்கில் முத்தமிடுகின்றனராம். இத்தாலி நாட்டில் ஆணும், பெண்ணும் உதட்டில் முத்தமிடுவதன் மூலம் தங்களின் திருமணத்தை உறுதிபடுத்துகின்றனராம்.

காதலர்கள் பொது இடத்தில் முத்தமிட்டுக்கொள்வதற்கு ஜப்பான், கொரியா, சைனா, தைவான் போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முத்தமிட்டுக்கொள்வதைப் பற்றி இப்படி பல்வேறு வேடிக்கையான உண்மைகள் நிலவுகின்றன. ஒருநாளைக்கு நீங்க எத்தனை தடவை முத்தமிடுறீங்க?



English summary
Kissing is something passionate and eternal. A small or a big kiss has a lot of impact not only in the relationship but also in health. It is believed that kissing helps to lose weight as it burns calories so why just making love to get in shape??? What are the other facts about kissing?
Story first published: Thursday, March 29, 2012, 17:18 [IST]

Get Notifications from Tamil Indiansutras