அதிகரிக்கும் காதல்
வியர்வை என்பது அவ்வளவு மோசமானது அல்ல என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குறிப்பாக புதிய காதலி, காதலியை தேடிக்கொள்வதற்கும் தற்போதுள்ள துணையுடனான உறவை மேம்படுத்தவும் வியர்வை உதவுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயத்துடிப்பு அதிகரிக்கும்
வியர்வை வாசத்தோடு உள்ள கணவனின் அருகில் சென்றாலே பெண்களின் உணர்வுகளை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறதாம். அதை விட இதயத்துடிப்பின் லப் டப் வேறு அதிகமாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது நான் ரெடி என்று சிக்னல் தந்து பெண்களை தயார்படுத்தவே ஆண்களின் வியர்வையில் ஒருவித மணம்மிக்க ரசாயனம் சுரப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆண்களின் வியர்வையில் உள்ள androstadienone மணத்தை நுகரும் பெண்கள் உடனடியாக காதல் உணர்வுக்கு ஆட்படுகின்றனராம். அவர்களின் சுவாசம் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஈர்ப்பை அதிகரிக்கும்
இதேபோல் வியர்வையானது கணவன் மனைவிக்கு இடையிலான ஈர்ப்பை ஏற்படுத்த உதவுகிறது என காமம் மற்றும் காதல் என்ற புத்தகத்தின் இணை ஆசிரியையான கெப்ரியெலா புரோபோஸ் தெரிவித்துள்ளார். வியர்வையில் ஈர்ப்பை ஏற்படுத்தும் பெரோமன் எனும் இரசாயனம் உள்ளது. இதுவே ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் உணர்வுகளை அதிகரிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வியர்வையின் மணத்திற்காகவே தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடைகளை மாற்றி அணிந்து கொள்கின்றனராம். ஏனெனில், உங்களது துணைவரின் வியர்வை மனம் ஆடைகளில் கொஞ்சமாவது இருக்கும். அதனால்தான் அந்த ஆடையை நீங்கள் விரும்புகிறீர்கள்’ என நூலாசிரியர் கப்ரியெலா தெரிவித்துள்ளார்.
நெப்போலியனுக்கு பிடித்த வாசனை
இந்த புத்தகத்தில், தனது துணையின் வியர்வை மனத்தை விரும்பிய ஒருவராக பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் குறிப்பிடப்பட்டுள்ளார். தயவு செய்து கழுவி விடவேண்டாம். 3 நாட்களில் வருவேன் என அவர் தனது மனைவி ஜோஸப்பினுக்கு அனுப்பிய ரகசிய தகவலொன்றில் தெரிவித்துள்ளார். இதுபோல வியர்வை குறித்து இந்த புத்தகத்தில் பல குறிப்புகள் உள்ளன.
இந்த புத்தகத்தில் வியர்வை குறித்து பல குறிப்புகள் உள்ளன. வியர்வை என்பது ஒரு மட்டம்வரை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. அளவுக்கு அதிகமானால் நல்லதல்ல. எப்போது அதனை நிறுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.’ எனவும் அவர் கூறியுள்ளார்.