உயர் ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபர் டென்சன் நோய் பாதிப்பினால் இதயம் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அதேசமயம் ஹைபர் டென்சன் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய உணவுப் பழக்கத்தினால் பெரும்பான்மையோரை உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்குகின்றன. இதனால் இதயநோய், நீரிழிவு போன்றவை அழையா விருந்தாளியாக உடலினுள் புகுந்து இயல்பு நிலையை பாதிக்கிறது.
இந்தநிலையில் உயர் ரத்த அழுத்த நோய் உடம்பில் உள்ள நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் உணர்வு நரம்புகளில் சரியான அளவில் ரத்தம் பாய்வது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியரின் உறவில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயர்ரத்த நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர்களை ஆராய்ந்த போது இதயநோய் பாதிப்போடு தாம்பத்ய உறவில் குறைபாடு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
ஆண்களுக்கு ஆர்வம் குறைவு
உயர்ரத்த அழுத்தம் காரணமாக ஆண்களுக்கு எழுச்சிநிலை தோன்றுவது (Erectile dysfunction )தடைபட்டது மேலும் உணர்வுப் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில் குறைந்த அளவு ரத்தமே பாய்ந்தது. இதனால் ஆண்களுக்கு தாம்பத்ய உறவு மீதான ஆர்வம் குறைந்தது.
பெண்களுக்கு பாதிப்பு
இதேபோல் பெண்களுக்கு உறுப்புகளில் வறட்சிநிலையும், ஆர்கஸம் ஏற்படுவதும் குறைந்து போனது. இதனால் மனரீதியாக பெண்கள் பாதிக்கப்பட்டனர். உயர்ரத்த அழுத்த நோயினால் இதயபாதிப்புகள் குறைவான அளவே இருந்தாலும், மனதளவில் தம்பதியருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உறவில் ஈடுபடுவது குறைந்து போனதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.