•  

ஒல்லிக்குச்சி பெண்களுக்கு குழந்தை பிறக்காதா?

Skinny Woman
 
குண்டாக இருக்கும் பெண்களை விட சைஸ் ஜீரோ மற்றும் அதை விட மோசமாக மெலிந்திருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

இன்றைய பெண்களிடம், யாரைப் பார்த்தாலும் நான் சைஸ் ஜீரோவாக முயல்கிறேன், இதற்காக கடுமையான டயட்டில் இருக்கிறேன், வாயைக் கட்டிப் போட்டுள்ளேன் என்று பேசுவது பேஷனாகி விட்டது. ஒல்லிக்குச்சியாக, எலும்பும் தோளும் தனித்துத் தெரியும் அளவுக்கு மெலிந்து போவதையே பேஷனாக இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். பூசினாற் போல, இருப்பதை பலரும் விரும்புவதில்லை.

ஆனால் இப்படி எலும்பும் தோளுமாக காட்சி தரும் மெலிந்த பெண்கள் கல்யாணத்திற்குப் பிறகு கருத்தரிப்பதில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சிகாகோவைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஷெர்பான். இதுகுறித்து அவர் கூறுகையில், மாடல் அழகிகளைப் பார்த்து பல பெண்களும் சைஸ் ஜீரோவுக்கு முயலுகிறார்கள். இதற்காக சரியாக சாப்பிடுவது கூட கிடையாது. பட்டினி கிடந்து உடலை வருத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது நான் மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 2500 பேருக்கு நான் செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டுள்ளேன். இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஒல்லியான உடல் வாகு கொண்ட பெண்கள் கருத்தரிப்பதில் சிரமத்தை சந்திக்கிறார்கள் என்பது.

மெலிந்த உடல் வாகுடன் கூடிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சரியாக சுரப்பதில்லை. இதனால் அவர்கள் கர்ப்பமாவது பெரும் சிரமமாகி விடுகிறது. அதேசமயம், குண்டாக இருப்பவர்கள், அதிலும் ஓவர் வெயிட்டுடன் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு பெண்களுக்கான செக்ஸ் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மிகவும் குறைவாக இருப்பதால் அவர்கள் இயற்கையாக கருத்தரிக்க முடியாத நிலை காணப்படுகிறது என்கிறார் டாக்டர் ஷெர்பான்.

English summary
Being too skinny is far worse for women than being too fat when trying for a baby. A study found that such women are less likely to become pregnant than those who are overweight — including those classed as dangerously obese. Fertility specialist Richard Sherbahn, of the Advanced Fertility Centre of Chicago, said the amount of attention paid to being overweight meant that the perils of being underweight were being largely ignored. The problem was being exacerbated by the ‘size zero’ culture in girls and young women striving to emulate the skeletal look of models and other celebrities, the Daily Mail reports.
Story first published: Sunday, November 13, 2011, 15:32 [IST]

Get Notifications from Tamil Indiansutras