•  

செல்லமாய் ஒரு 'கடி', அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம்..!

Sensual Ideas To Make A Woman Horny
 
இல்லறத்தில் தாம்பத்யம் என்பது இனிய சங்கீதம் போன்றது. அது சந்தோசமாய் இருப்பதும், சங்கடமாய் மாறுவதும் தம்பதியர்கள் கையில்தான் இருக்கிறது.

பெண்ணின் உணர்வுகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஆண்கள் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அதே சமயம் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொள்ளும் ஆண்கள் சம்பிரதாய சடங்குபோல தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அன்பான தாம்பத்ய வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றிப் பாருங்களேன்.

காதோடு பேசுங்கள்

உங்களின் எண்ணத்தை மனைவியின் காதோரம் செல்லமாய் குசு குசுப்பாய் பேசுங்களேன். அதிலேயே கிறங்கிப்போவார் உங்கள் துணைவி. நீங்கள் காதலாய் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு போனஸ் மகிழ்ச்சியை தரும்.

மனம் விட்டு பாராட்டுங்களேன்

உங்கள் மனைவியின் செயல்பாடுகளை மனம் விட்டு பாராட்டுங்களேன். அது அவரது உற்சாகத்தை அதிகப்படுத்தும். அப்புறம் உங்களின் நெருக்கமான செயல்பாடுகள் மனைவியை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும்.

ரொமான்ஸ் நிகழ்வுகள்

உங்களின் தேவையை உங்கள் செயல்பாடுகளே உணர்த்துமே. வெளிநாடுகளில் என்றால் இரவு டின்னரில் கண்டிப்பாய் ஒயின் இருக்கும். நம் ஊரில் மல்லிகைப் பூ, அல்வா கொடுத்து மனைவியை அசத்தி விடுவார்கள். இதே டெக்னிக்கை நீங்கள் கடைபிடித்து பாருங்களேன். அல்வா பிடிக்காவிட்டால் உங்கள் துணைவிக்கு என்ன ஸ்வீட் பிடிக்கிறதோ அதை கொடுத்து உங்கள் எண்ணத்தை தெரிவிக்கலாம்.

முன் விளையாட்டு

காதலுக்கு முந்தைய விளையாட்டுக்கள் மனைவிக்கு மிகவும் பிடித்தமானது. கன்னத்தில் செல்லமாய் ஒரு கடி, அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம் என தொடங்குங்களேன் அப்புறம் என்ன உங்கள் துணைவி உங்களுக்கு பிடித்தமானவராய் நடந்து கொள்வார் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

English summary
Exciting a woman is not an easy task for a man. Unlike men, women take time to get horny and reach orgasm! A man can get horny in seconds but for a woman, the drive takes time to reach the peak. Here are few ideas to make a woman horny easily. Take a look.
Story first published: Tuesday, March 20, 2012, 15:05 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more