சின்னதாய் மசாஜ்
நாள்தோறும் குடும்பத்திற்காக உழைத்து சோர்வடைந்துள்ள மனைவியை மகளிர் தினத்தில் சின்னதாய் மசாஜ் செய்து மகிழ்ச்சிப் படுத்தலாம். தலைகோதி நெற்றியில் சின்னதாய் ஒருமுத்தம். அவரின் உடலை சிலிர்க்கச் செய்யும்.
விரல்களில் சொடுக்கெடுத்து ஆலிவ் எண்ணெய் போட்டு விடலாம். அது உங்கள் அன்பான மனைவியின் மனதை குளிரவைக்கும். ஓடி ஓடி உழைக்கும் பாதங்களை மெதுவாய் வருடி விடலாம். பாதத்தில் மென்மையாய் முத்தமிடுவது உங்கள் மனைவியை உச்சி குளிரவைக்கும்.
தலைகோதும் விரல்கள்
துணைவியின் கூந்தலை அவருக்கு வலிக்காமல், பூ போல மெல்ல வருடங்குள், கூந்தலில் சிக்கல் இருந்தால் அதனை மெல்ல எடுக்க வேண்டும். இதன் பின் மனைவியின் முதுகில் மெதுவாய் வருடிக் கொடுங்கள். இந்த செயல் அவரை கிளர்ச்சியூட்டும். பின்னர் துணைவியின் தோள்களில் தன் கைகளை போட்டு, சிறிது தூரம் நடக்கலாம். அன்பான பேச்சும், அரவணைப்பும் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும்.
வர்ணிக்கலாம் தப்பில்லை
மகளிர் தினத்திற்கு புதிதாய் ஒரு புடவை பரிசளிக்கலாம். அதை கட்டிக்கொண்டு வந்தால் கொஞ்சம் அதிகப்படியாககத்தான் வர்ணியுங்களேன். காசா? பணமா? எல்லா மனைவியுமே தன்னை தன் கணவர் ரசித்து வர்ணிக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகின்றனராம். அதேபோல உங்களின் புகழ்ச்சி அவரை மகிழ்ச்சியடையச் செய்வதோடு மிகப்பெரிய பரிசாக உங்களுக்கு திரும்ப வரும் என்றும் உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.