காதலுக்கு நீல நிறம்
படுக்கை அறையில் ரொமான்ஸ் மூடு வருவதற்கு இரவு விளக்கின் நிறம் மிகவும் முக்கிய அம்சமாகும். இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளில் அமைதியும், சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கை அறையில் நீல நிற விளக்கை பயன்படுத்துவது நல்லது. படுக்கை அறைக்கும் கூட இள நீல நிறத்தில் பெயிண்ட் அடிப்பது காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.
மெழுகுவர்த்தி வெளிச்சம்
மின்விளக்கு வெளிச்சம் பிடிக்காதவர்கள் படுக்கை அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரிக்கலாம். இது அறையின் அழகையும், ரொமான்ஸ் மூடையும் அதிகரிக்கும்.
ரோஜா பூங்கொந்து
சுகந்தமான மணம் தரும் ரோஜா மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். ஏனெனில் ரோஜாவிற்கும் ரொமான்ஸ்க்கும் நெருங்கிய தொடர்ப்பு உண்டு.
மென்மையான இசை
படுக்கை அறையில் மனம் மயக்கும் மெல்லிய இசையை கசிய விடுங்கள். அது காதல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.
இயற்கை அலங்காரம்
படுக்கை அறையில் கூடை ஒன்றில் மாதுளை முத்துக்கள், ஸ்ட்ராபெரி, திராட்சைப் பழங்களைக் கொண்டு அழகாய் அலங்கரியுங்கள். அது உங்களின் ரசனையை அதிகரிக்கும்.
பட்டுத் துணி அலங்காரம்
மென்மையான, வழு வழு துணிகளைக் கொண்டு படுக்கை, தலையணைகளை அலங்கரிக்கலாம். கொசு வலை இருந்தால் அதை படுக்கையின் மேல் அலங்கரிப்பது ஒரு ராஜ தோரனை ஏற்படும்