•  

மனைவியிடம் பொய் சொல்லும் கணவரா?

Husband and Wife
 
இன்னைக்கு நீ சூப்பரா இருக்கியே? என்ன விசயம்? தினசரி மனைவியைப் பார்த்து கணவர் சொல்லும் முதல் பொய் இதுவாகத்தான் இருக்கும். அப்போதுதானே அன்றைய பொழுது பிரச்சினை இல்லாமல் கழியும்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள கணவர்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். மனைவியை திருப்தி படுத்த கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

பொது இடத்தில் பொய்

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது அம்சமாய் ஒரு பெண் கிராஸ் செய்தால் அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே என்று கேட்பதோடு நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள்.

புது ஐட்டம் பாஸ்

வீட்டில் ஏதாவது புதிதாக சமைத்தால் முதலில் பரிசோதனை செய்வது கணவரை வைத்துதான். மனைவியை சந்தோசப்படுத்த கணவரும் மூச்சுவிட முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று கணவன்மார்கள் பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் விடுவார்களாம்.

சமைத்த சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக் கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.

நீதான் அப்சரஸ்

புதிதாக ஒரு புடவையை கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான் அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்..! (எதுக்குச் சொல்வானேன், அங்கங்கே எக்குத்தப்பா வீங்குவானேன்...)

கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தானாம். இதையே சாக்காக வைத்து எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை கணவர்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Men lie to women. Women lie to men. And most people agree that some lying is even necessary — to avoid petty squabbles and to grease the wheels of a relationship. But there are crucial differences in the lies women and men tell.
Story first published: Friday, March 2, 2012, 12:36 [IST]

Get Notifications from Tamil Indiansutras