•  

அதுக்கும் கொஞ்சம் லீவ் விடுங்க ! ஆர்வம் அதிகரிக்கும் !!

 
தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்பது வெறும் கடமையாக மட்டுமில்லாமல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் பின்பற்றுங்கள்.

புதுசா இருக்கட்டும்

எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய முயற்சி ஆர்வத்தை அதிகரிக்கும்.

தனிமையில் சந்திப்பு

அலுவலகம் செல்லும் ரகசியமாய் ஒரு குறிப்பு எழுதுங்கள். மாலைப் பொழுதில் புதிதாய் ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அங்கே காத்திருங்கள். அழகான ஆடையில் கணவரை கவர்ந்திழுக்கும் வகையில் நீங்கள் அமர்ந்திருப்பதை கண்டு உங்களவர் அசந்து போவார். அந்த தருணத்திலேயே காதல் நெருப்பு பற்றிக்கொள்ளும்.

கொஞ்சம் பிரிவு அதிக நெருக்கம்

இருவரும் தனித் தனியே சுற்றுலா செல்லுங்கள். அது அலுவலக வேலையாகவும் இருக்கலாம். அந்த சில நாள் பிரிவு நெருக்கத்தை அதிகரிக்கும். எப்பொழுது சந்திப்போமோ என ஏக்கத்தை ஏற்படுத்தும்.

முதல் ஸ்பரிசம்

முதல் இரவில் நடந்த சம்பவங்கள். தேனிலவு நினைவுகளை மனதில் ஓட்டிப்பாருங்கள் அந்த நினைவுகள் புது உத்வேகத்தை உருவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சுறு சுறுப்பான செயல்பாடு

உற்சாகம் தரும் விளையாட்டில் ஈடுபடுவது உறவிற்கான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வேகமாக ஆற்றில் படகில் செல்வது, சுறுசுறுப்பாக வேலை செய்வது. நீந்துவது என உற்சாகமாக செயல்படுங்கள். புதுவித த்ரில் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்

சில நாள் விடுமுறை

தினமும் உறவு என்பது போராடித்து விடும். ஒருவாரம் விடுமுறை விட்டுப்பாருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் அதை வைத்துக்கொள்ளலாம் என தீர்மானியுங்கள். அதுவரை தீண்டல், விளையாட்டு, சின்ன சின்ன முத்தம் என எதிர்பார்ப்பை எகிற வைக்கலாம். அதற்காக ஒரேடியாக லீவ் தேவையில்லை என்பது அவர்களின் அறிவுரை.

English summary
Feeling shy to make that first move in the bedroom? Well, here are six sex tips to get you all raring to go and sweep your man off his feet.
Story first published: Friday, February 10, 2012, 18:26 [IST]

Get Notifications from Tamil Indiansutras