•  

இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்!

Yoga
 
யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது.

பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பத்மாசனம்

பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.

புஜங்காசனம்

புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும்.அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.

இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.

தனுராசனம்

வில்போல வளைந்து செய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும். வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும்.

உற்சாகம் கூடும்

யோகா பயிற்சியின் உடலானது கட்டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
Great sex is a terrific mind-body experience- as is yoga. Yoga not only relieves stress-one of the drive dampeners-but also improves flexibility, increases blood flow, strengthens your lower abdomen and fills you with energy that help steam things up in the bedroom. Try these yoga poses for better sex.
Story first published: Wednesday, February 15, 2012, 17:33 [IST]

Get Notifications from Tamil Indiansutras