திருமணமான முதல்நாள் இரவில் புதுமணத் தம்பதியரின் உடல்கள் மட்டும் சங்கமிப்பதில்லை உள்ளங்களும் சங்கமிக்கின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே சந்தோச சாம்ராஜ்யம் நடைபெறும்.
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
தம்பதியரியரிடையே சரியான பேச்சுவார்த்தை இருப்பது அவசியம். எதையும் கூறும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவேண்டும். எதையும் தெரிவிப்பதில் நேர்மையை கடைபிடிப்பது அவசியம்.
ஒருவர் மட்டுமே பேசக்கூடாது மற்றவரையும் பேச அனுமதிக்கவேண்டும். நீங்கள் பேசுவதை விட துணைவரை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருப்பது மிகச்சிறந்த நன்மதிப்பினை ஏற்படுத்தும். எதிர்காலத்தைப் பற்றி பேசுங்கள். பேச்சானது எப்பவுமே நேர்மறை எண்ணத்துடன் இருக்கவேண்டும்.
வார விடுமுறை வசந்தம்
வாரவிடுமுறை நாட்களில் வீட்டைவிட்டு கண்டிப்பாக வெளியே செல்லுங்கள். சினிமா, பார்க், ஹோட்டல் எங்கு வேண்டுமானலும் இருக்கலாம். தனியாக இருவரும் கிளம்புங்கள். அமைதியான சூழலில் அமர்ந்து இருவரும் பேசி மகிழுங்கள். வாரம் ஒருமுறையாவது இரவு நேரத்தில் டின்னருக்கு ஏற்பாடு செய்யலாம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புதுமணத் தம்பதியர் அமர்ந்து பேசுவது அன்பை அதிகப்படுத்தும்.
புகழ்ச்சி அவசியம்
காதலிக்கும் போது எத்தனையோ புகழ்ச்சி வார்த்தைகளை கூறியிருக்கலாம். திருமணத்திற்குப்பின்னல் அதை பின்பற்றுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில் புதுமணப் பெண்கள் முதலில் எதிர்பார்ப்பது கணவரின் புகழுரையைத்தான்.
தவறுக்கு மன்னிப்பு
புதுமண வாழ்க்கையில் தவறு நிகழ வாய்ப்பு ஏற்படுவது குறைவு. அதே சமயத்தில் எங்காவது செல்ல திட்டமிட்டு விட்டு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தவறாமல் மன்னிப்பு கேட்கலாம். அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும்.
சந்தோச சாம்ராஜ்யம்
குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம்.
உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து என்பதை புதுமணத் தம்பதியர் உணரவேண்டும். இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை. அப்புறம் என்ன தம்பதியரிடையே சந்தோச சாம்ராஜ்யம்தான் ஜமாயுங்கள்.