கலந்து ஆலோசியுங்கள்
தவறாக செய்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விட முன்னதாகவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து செய்வது பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும்.
வார்த்தைகளில் கவனம்
ஒவ்வொரு வார்தைகளிலும் கவனம் அவசியம். சின்ன வார்த்தைகள் கூட பூதாகரமான பிரச்சினையை உருவாக்கும். எனவே தெரியாமல் வார்த்தைகள் விழுந்து விட்டால் கூட உடனே மன்னிப்பு கேட்க தயங்கவேண்டாம்.
நாம் பேசும் விசயம் எதற்காக என்பதை இருவருமே உணர்ந்து கொண்டால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம். ஏனெனில் பைசா பெறாத விசயங்களுக்குதான் தம்பதியரிடையே அதிக அளவில் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்
சின்ன சின்ன விசயங்களுக்கு கூட உணர்ச்சி வசப்பட்டு பேசுவது தேவையற்றது. எனவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்படுதை தவிர்க்கும்.
மன்னியுங்கள் மறந்து விடுங்கள்
எந்த ஒரு தவறென்றாலும், தவறு யார் மீது என்றாலும் மன்னிக்கும் மனப்பக்குவம் வேண்டும். தவறுகளை மறந்துவிடுவது அனைத்தையும் விட சிறந்தது என்கின்றனர் உளவியலாளர்கள்.
எதற்கும் ஒரு முடிவு உண்டு
எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. எனவே பிரச்சினை சிறியதாக இருக்கும் போதே அவற்றை தீர்க்க முயலவேண்டும். வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் முகத்தை திருப்பிக்கொண்டாலும் அன்றைய இரவுக்கும் அதனை தீர்க்க முயலவேண்டும். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரம்.
காலில் விழலாம் தப்பில்லை
குழந்தைகள் முன் சண்டை போடக்கூடாது. ஏனெனில் அவர்களை மன ரீதியாக பாதிக்கும். குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் முன்னிலையில் வாக்குவாதம் போடுவதை தவிர்க்கவும். அப்படியே சண்டை போடவேண்டும் என்று நினைத்தால் தனிமையில் சண்டை போடுங்கள். தவறு உங்களுடையது எனில் தயங்காமல் காலில் விழுங்கள். முக்கியமாக எதையுமே நேர்மறையாக நினைக்க கற்றுக்கொள்ளுங்கள் அதுவே தம்பாத்ய வாழ்க்கையில் சந்தோச பூ மலரும்.