•  

30 வயது பெண்களும், 40 வயது ஆண்களும் அழகு– ஆய்வு முடிவு

Women sexiest in their 30s, Men in their 40s
 
பதின் பருவத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது கவிஞர்களின் சொல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் முப்பது வயதைக் கடந்த நடுத்தர வயதில்தான் பெண்கள் அழகாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

மனிதர்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என அநேகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

'ஆண்டிகள்தான்' அழகு!

மனிதர்களின் அழகு பற்றி 1000 ம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களிடம் கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக ஏராளமான இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ( ஏன் எல்லோரும் இப்படி 'ஆன்டி ஹீரோ'வாக மாறினாங்களோ தெரியலை)

ஆண்கள் 40 வயதில் அழகு

இதேபோல் பெண்களிடம் கேட்கப்பட்டதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதாக கூறியுள்ளனர் (அப்படியா! ) ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.

அழகிற்கு காரணம் என்ன?

இளம் வயதில் குடும்ப சூழ்நிலையால் தன்னைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொண்டு ஒரளவு லைஃபில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர். அதனாலேயே பிறரது கண்களுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றனர்.

ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் இதனாலேயே அவர்களின் உடல் அமைப்பு கவர்ச்சிகரமானதாக மாறிவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எப்படி இருந்தா என்ன, ஆண்களும் அழகுதான், பெண்களும் அழகுதான் - எந்த வயதாக இருந்தாலும் என்பதை உணர்ந்தால் எப்போதும் எல்லோரும் அழகுதான்..

English summary
Men are at their sexiest and at their peak pulling power when they are in their naughty 40s, a new study says.The study, based on a survey, found that women find men in their 40s more attractive while females feel at their sexiest in their 30s -- the age males find them pretty, daily reported.
Story first published: Tuesday, December 27, 2011, 13:09 [IST]

Get Notifications from Tamil Indiansutras