•  

உடலைப் பெருக்க வைக்குமா செக்ஸ்?

Sex
 
அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல்லை என்பது டாக்டர்களின் கருத்து.

உடல் குண்டாகும் என்பதைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்பளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து.

மன ரீதியான மாற்றத்திற்கும், உடல் ரீதியான மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும், உடல் பெருக்கத்திற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. மேலும் தினசரி அல்லது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் மார்பகம் பெருக்கும் என்பதற்கோ, இடுப்பளவு அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும் ஆணின் விந்தனு, பெண்ணின் ரத்தத்துடன் கலக்கும் என்பதும் கூட ஒரு மாயைதான். அதிலும் உண்மை இல்லை.

மேலும் ஒரு ஆணின் 2 முதல் 3 மில்லி அளவிலான விந்தனுவில் அதிகபட்சம் 15 கலோரி மட்டுமே இருக்கும். எனவே உடலுறவால் பெண்களுக்கு உடம்பு பெருத்து விடும் என்பது நிச்சயம் உண்மையில்லை என்கிறார்கள் டாக்டர்கள்.

அதேசமயம், திருமணத்திற்குப் பின்னர் உடல் பெருக்கம் ஏற்படுவது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கும் நிகழ்வுதான். ஆனால் இதற்கும், செக்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை. ஒரு நிரந்தரமான உறவு அமைவது ஏற்படுத்தும் சந்தோஷத்தால் ஆணும் சரி, பெண்ணும் சரி தங்களது உடல் ரீதியான விஷயங்களில் கவனத்தை படிப்படியாக இழக்கிறார்கள். இதனால் அவர்கள் டயட், உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் குறைகிறது. இதனால்தான் அவர்களுக்கு எடை கூடுகிறதே தவிர செக்ஸ் உறவால் அல்ல என்பது டாக்டர்கள் தரும் விளக்கம்.

மேலும் பேச்சலர்களை விட திருமணமானவர்கள் அதிகம் சாப்பிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறதகு. இந்த அதிகரித்த உணவுப் பழக்கமும் கூட உடல் எடை கூடுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

எனவே திருமணத்திற்குப் பின்னர் அதிக அளவில் செக்ஸ் வைத்தால் உடல் எடை கூடும் என்ற எண்ணத்தை கைவிடுங்ககள். மாறாக திருமணத்திற்குப் பிறகு உடல் வனப்பி்ல அதிக கவனத்தை செலுத்துங்கள். டயட்டை முறையாக கடைப்பிடிப்பது, உடற் பயிற்சிகளைத் தொடருவது என்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாறாக செக்ஸில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.

English summary
It is a very popular belief that women gain weight on their breasts and hips once they start making love. However, this is an absolute myth. There is no physiological reason why the breasts or hips should become enlarged or disfigured after a woman starts having sex. There is no way that ejaculated semen can get digested and assimilated in the bloodstream. And, in any case, 2–3 ml of semen (average ejaculation) contains only about 15 calories.
Story first published: Sunday, June 12, 2011, 16:22 [IST]

Get Notifications from Tamil Indiansutras