கடலின் ஆழத்தில் உள்ளதைக் கூட கண்டுவிடலாம், பெண்ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கவிஞர்களும், உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர் பேகோ ஆய்வு செய்துள்ளார். எண்ணற்ற பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.
பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றி பேகோ மிகப்பெரிய பட்டியலிட்டுள்ளார். அவை உங்களுக்கு:
தனித்திறன் அவசியம்
மிகச்சிறந்த ஆண்மகனைத்தான் அனைத்து பெண்களும் பிடிக்கும் என்று கூறியுள்ளனர். தனித்திறன் மிக்கவனாகவும், அனைவராலும் பாரட்டு பெற்ற ஆண்மகனையே தங்கள் துணையாக தேர்ந்தெடுப்போம் என்று 80 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர். மிக முக்கியமாக படுக்கையறையில் புதுமையாக செயல்படும் கணவனாக அமையவேண்டும் என்பது அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. போர் அடிக்கும் விதமாக இல்லாமல், எதையும் வித்தியாசமாக சொல்லவோ, செய்யவோ வேண்டும் என்று அநேகம் பெண்கள் கூறியுள்ளனர்.
வருமானத்தின் பகிர்வு
கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள். ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
ஓய்வுக்கு அனுமதிக்கவேண்டும்
அலுவலக நாளில் அதிகாலையில் எழுந்து வேலைகள் செய்துவிட்டு அரக்க, பரக்க ஓடவேண்டியுள்ளது. எனவே விடுமுறை நாட்களிலாவது தங்கள் இஷ்டம் போல தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பது 70 சதவிகிதம் பெண்களின் விருப்பமாக இருக்கிறது. ஏதாவது விசேசமாக செய்யலாமே என்று கணவன் தொந்தரவு செய்யக்கூடாதாம்.
வெளியூர் டூர் அவசியம்
வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் பலரும் வாரம் ஒருமுறையாவது தங்கள் கணவர் தங்களை தியேட்டர், ஹோட்டல் என்று அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை நான்கைந்து நாட்கள் வெளியூர் சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல வேண்டுமாம்.
திருமணத்தின் போது ஒல்லியா இருந்தவர்கள் குழந்தை பேற்றினால் குண்டாகிவிட்டால் அதைக்கூறி மனதை புண்படுத்தக்கூடாது என்பது நூறு சதவிகித பெண்களின் கருத்தாக உள்ளது.
கட்டுப்பாடு கூடாது
ஆபிசிற்கு போகிறேன் பேர்வழி என்று வீட்டில் இருக்கும் பெண்களை அநேக ஆண்கள் படுத்தி எடுப்பதாக ஏராளமான பெண்கள் நினைக்கின்றனர். எனவே காலை நேரத்தில் அலுவலகம் புறப்படும் ஆண், அது எடு, இதை எடு என்று தொந்தரவு செய்யக்கூடாதாம். அதேசமயத்தில் பொறுமையாக கேட்டால் அதனை செய்து தர ரெடியாகவே இருப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
சாவி கொடுத்த பொம்மை போல பெண்களை பயன்படுத்தக்கூடாது என்பது ஒட்டுமொத்த பெண்களின் எண்ணமாக இருக்கிறது. அதிகம் பேசாதே, சிரிக்காதே என்று கட்டுப்படுத்தக்கூடாதாம். தங்களுக்கான சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பது அநேகம் பேரின் விருப்பமாக உள்ளது.
செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. அய்யோ… பில் அதிகமாகி விடும்" என்று சொன்னால் எரிச்சல் ஆகிவிடும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். அதனால், தங்களின் மனம்போல் பேச விட்டுவிட வேண்டும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.
சம பங்கு வேண்டும்
எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறக்கணிக்கக்கூடாது. குழந்தைகளை கவனிப்பதில் இருவரும் சமமாக இருக்கவேண்டும் என்பது பெண்களின் விருப்பம். எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கூறிக்கொண்டிருக்கும் ஆண்களை அறவே பிடிக்காதாம் பெண்களுக்கு.
என்ன பெண்ணின் மனதில் உள்ள ரகசியங்களைப் படித்து மயக்கமே வருகிறதா? இது சாம்பிள்தான். புதிதாக திருமணம் செய்து கொண்ட ஆண் புது மனைவியின் ஆசையை நிறைவேற்ற படும் பாடு இருக்கிறதே பக்கத்தில் இருந்து பார்ப்பவர்கள் செம சிரிப்பை வரவழைக்கும். அவர்கள் பேசாமல் பேகோ கூறியவற்றை படித்து அதன்படி பெண்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே குடும்பம் குதூகலமாக மாறிவிடும்.