•  

புத்துணர்ச்சியுடன் இருக்க முத்தமிடுங்கள்!

Kiss
 
'முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்' என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு. அன்பின் அடையாளமாக திகழும் முத்தம் பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே முன்பு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

முதல்முறை முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் முழுதும் இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை அனைவராலும் மறுக்க முடியாது.

முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை சரியாக கையாளத் தெரிந்தவர்கள்தான் காதல் வாழ்க்கையில் மன்னர்களாக முடிசூட்டிக்கொள்கின்றனர்.

முத்தம் பற்றி ஆதிமுதல் அந்தம் வரைக்கும் பலரும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முத்தத்தினால் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலின் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக

மகிழ்ச்சிக்கான அளவுகோல்

தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

தங்கள் வாழ்க்கைத்துணையுடன் முத்தத்தை பகிர்ந்து கொள்வதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பெண்கள் கருதுகின்றனர். தங்களின் அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் வெளிப்படுத்துகின்றனர்.

உடலுக்கு புத்துணர்ச்சி

ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தரும் முத்தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. முத்தம் பெறுபவருக்கு மட்டுமல்லாமல் தருபவருக்கும் இன்பதை அளிக்கிறது.

நீங்கள் உடல் நலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலும் வெற்றியுடனும் வாழ விரும்பினால் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது உங்களது வாழ்க்கைத் துணைக்கு முத்தமளித்துவிட்டு கிளம்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது நாள் இனிய நாளாக மட்டுமல்ல வெற்றிகள் கிட்டும் நாளாகவும் அமையும்.

இளமை தோற்றம் அதிகரிக்கும்

நீண்ட முத்தத்தினால் உங்கள் உடலில் தேவையற்ற காலோரிகள் அழிகின்றன. இதனால் உங்கள் உடலை எப்போதும் கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம். பிரெஞ்ச் முத்தத்தினால் உங்கள் வாய் தசைகளுக்கும், கன்னத்திற்கும் எளிதான உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.

அன்பானவர் அளிக்கும் எதிர்பாராத முத்தத்தினால் உங்கள் இதயம் படபடக்கும். அப்போது அதிகமான ரத்தம் உடலுக்குப் பாயும். அப்போது எல்லா நரம்புகளும் வேலை செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

கண்களை மூடிக் கொண்டு மூச்சை நிறுத்தி முத்தம் கொடுப்பதன் மூலம் கண்களுக்கும், இதயத்திற்கும் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. டென்ஷனையும் குறைக்கிறது. எனவே நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது கிடைக்கும் முத்தத்திற்கு மதிப்பு அதிகம்.

முத்தத்தில் கலக்கும் பெண்கள்

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும், பெறுவதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்கள்.

முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம். முத்தம் விஷயத்தில் ஆண்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் டாப்.'

தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெண்கள் பெறுகின்றனராம் இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, அமெரிக்க ஆய்வு ஒன்று.

ஆனால், நம் நாட்டுப் பெண்கள் எப்படி…? அது ரகசியம்!

English summary
We know kissing as a social pleasantry, the appropriate ending to a date and a means of connecting with our main squeeze. The collision of lips and tongues that we often take for granted has a whole lot more bubbling under the surface than what meets the eye. Swine flu scares and mono aside, kissing actually does a body very, very good. Scientific reports say kissing increases the levels of oxytocin, the body’s natural calming chemical and also increased endorphins, the body’s feel-good chemicals. Swapping spit is also noted to increase dopamine, which aids in feelings of romantic attachment.
Story first published: Sunday, May 29, 2011, 10:43 [IST]

Get Notifications from Tamil Indiansutras