•  

காதலில் வெற்றி பெற வழிமுறைகள்

Lovers
 
காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் :

- நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும்.

- நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோமா ? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான்.

- நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.

- நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னிப்பாக கவனித்து பதில் கொடுத்தால் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான்.

- சாதாரணமாக பேசும் பொழுது நீங்கள் அணிய உள்ள உடையின் நிறம் பற்றி நண்பர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த கலரை நீங்கள் அணிய உள்ளதாக கூறினால் நீங்கள் விரும்பும் நபரும் அதே கலர் உடையில்தான் வருவார் என்பது நிச்சசயம்.

- உங்களுக்குப் பிடித்த பாடலை முணுமுணுங்கள். உடனே அது உங்களவரின் ரிங்டோனாகவோ, காலர் டியூனாகவோ மாறிவிடும்.

- பிடித்த பொருட்களை கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகிவிடும்.

- எந்த ஒரு விஷேச தினமென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை அதிகமாக்கும்.

- எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். காதல் தருணங்களில் உண்மைதான் அன்பின் ஆழத்தை அதிகப்படுத்தும்.

- நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. நம் காதலிக்கும் நபரிடம் இருந்து முத்தமோ, அடியோ எதுவென்றாலும் வாங்குவது நாமாகத்தான் இருக்க வேண்டும்.

- ஆல் தி பெஸ்ட். தைரியமாக காதலை வெளிப்படுத்துங்கள் வெற்றி பெறுங்கள்.

English summary
Love is not about giving or receiving gifts but about sharing each other’s feelings and letting each other know how much you really care. You need to be romantic, creative, and unique. The best way to show someone you really care is by words and how your actions make them feel special. You need to say something coming from the heart and show them from your soul. Love them for who they are and not for who you are.
Story first published: Sunday, April 10, 2011, 13:47 [IST]

Get Notifications from Tamil Indiansutras