காதலில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஜெயித்த காதலர்கள் சிலர் கூறிய விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இப்போது காதலிப்பவர்கள் இவற்றை பின்பற்றலாம்.
- காதல‌‌ர்க‌‌ளி‌ல் இரு வகை உ‌ண்டு, பெரு‌ம்பாலு‌ம் பே‌சி‌ப் பழ‌கிய‌ப் ‌பி‌ன்னரே காதல‌ர்களாக ஆவது‌ம், பா‌ர்‌த்த மா‌த்‌திர‌த்‌‌திலேயே காத‌ல் உ‌ண்டா‌கி காதலை‌த் தெ‌ரி‌வி‌த்த ‌பி‌ன் காதல‌ர்களானவ‌ர்களு‌ம் உ‌ண்டு.இ‌தி‌ல் எ‌ந்த வகையாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்க‌ள் ‌சில அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம்.
- காத‌ல் ம‌ற்றவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் தெ‌ரியாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌‌ப்பவரு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌க்க‌க் கூடாது. காதலை மறை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. தை‌ரியமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ள் காதலராக முடியு‌ம்.
- உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பதை தெ‌ரி‌வி‌ப்பதை ‌விட ஒரு ‌நி‌மிட‌ம் தை‌ரியமாக‌ச் செ‌ன்று ‌நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.
- காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் அடி‌க்கடி உ‌ங்களது காதலை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்து அ‌ட்டையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்.
- எதை வேண்டுமென்றாலும் மறக்காலம் காதலிப்பவரின் பிறந்தநாளை மட்டும் மறக்கக்கூடாது. துணையுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பிறந்தநாள் நினைவில் இல்லாதது போல இருந்துவிட்டு பின்னர் பரிசு கொடுத்து அசத்தலாம்.
- ஈகோ மனப்பான்மை இருக்கக்கூடாது. இதுதான் காதலர்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.
- காதல‌‌ர்க‌ள் எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் இருவரது பாதுகா‌ப்பையு‌ம் க‌ரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.
குறைகளை பட்டியல் இடாதீர்கள்
- உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் காதல‌ரி‌ன் குறைக‌ளை‌க் கூ‌றி‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டா‌ம்.
- காத‌லி‌ப்பவ‌ரி‌‌ன் குணா‌திசய‌ங்களை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று நிினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறான செயலாக இரு‌‌ந்தா‌ல் ம‌ட்டு‌ம் அதனை எடு‌த்து‌க் கூ‌றி அவரு‌க்கு உண‌ர்‌த்து‌ங்க‌ள்.
- கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம் காதல‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் குறைகளை‌ப் ப‌‌ட்டிய‌லிடா‌தீ‌ர்க‌ள். அத‌‌ற்கு ப‌திலாக அவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌ந‌ற் குண‌ங்களை‌ எடு‌த்து‌க் கூ‌றி இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌ங்களா இதை‌ச் சொ‌ன்‌னீ‌ர்க‌ள் அ‌ல்லது செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ல் ச‌ற்று மேலாக இரு‌க்கு‌ம்.
- காதலரை ‌விட ‌‌நீ‌ங்க‌ள் உய‌ர்‌ந்தவ‌ர் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் எ‌ந்த பே‌ச்சு‌ம் இரு‌க்க‌க் கூடாது. இருவரு‌ம் ஒரே உ‌யி‌ர் எ‌ன்பது போ‌ன்று‌ம், ஒருவரை ஒருவ‌ர் ந‌ம்‌பி வா‌ழ்வது போ‌ன்று‌ம் உ‌ங்க‌ள் பே‌ச்சு இரு‌க்க‌ட்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய அடி‌க்கடி காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு ச‌‌லி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.
- ரகசியம் காப்பது காதலில் மிகவும் முக்கியம். காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவையாக இருக்கவேண்டும்.
இப்படி இன்னும் இன்னும் நிறைய. அத்தனையையும் பின்பற்ற முடியாவிட்டாலும் கூட நச்சென்று நாலை கையில் எடுத்தால் இனிமையான காதல் உங்கள் வசமாகும்.