•  

வாழ்க்கைத் துணையை கவரும் எளிய வழிகள்

Life Partner
 
அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென புயலோ, சூறவளியோ வீசினால் பலர் அதனை எதிர்கொள்ள முடியாமல் நொருங்கிப் போய் விடுகின்றனர். ஒருசிலர்தான் எதிர்த்து நின்று பிரச்சினைக்குரிய காரணங்களை ஆராய்ந்து அதை தீர்க்க முயலுகின்றனர்.

இல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்து ஒருமித்த கருத்தோடு வாழ்வது மட்டுமே ஒற்றுமையோடு வாழ வழி வகுக்கும். இல்லையெனில் மணமுறிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விடும். இனிமையான இல்லறத்திற்கு கடை பிடிக்க வேண்டிய சில வழி முறைகள்.

துணையின் கருத்துக்கு மதிப்பு

எந்த ஒரு செயல் என்றாலும் ஒருவரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டாலே பாதி வெற்றி கிடைத்து விடும். அதுவும் மண வாழ்க்கையில் ஒருவருக் கொருவர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு அதற்கு தகுந்த முடிவெடுக்க வேண்டும்.

வீட்டிற்கும் வாங்கும் பொருளோ, உடுத்தும் உடையோ எதுவென்றாலும், துணையை தேர்வு செய்ய விடுங்கள். அவரது தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில் சாமர்த்தியமாக பேசி அதை வாங்காமல் தவிர்க்கலாம். மாறாக, அவரை விமர்சனம் செய்யக் கூடாது. இதுதான் விரிசலின் முதல் விதை.

அழகில் கவனம் தேவை

ஆண்களோ, பெண்களோ ஒரு குறிப்பிட்ட வயதிற்கு அப்பால் தங்களைப் பற்றி கவனம் கொள்ள தவறி விடுகின்றனர். இன்றைய கார்ப்பரேட் உலகில் ஆணும், பெண்ணும் அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்றுவதால் பிறருடன், தன்னுடைய வாழ்க்கைத் துணையை ஒப்பிட்டு பார்த்து ஏங்குவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே அவரவர், உடைகளிலும், உணவிலும் கவனம் கொள்ளுங்கள். உடலை கச்சிதமாக வைத்துக்கொண்டால் பிறர் மீது கவனம் திரும்ப வாய்ப்பில்லை.

வெளியில் செல்லுங்கள்

அலுவலகம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்பது இயந்திரமான வாழ்க்கை. இதனை தவிர்க்க வாரத்திற்கு ஒருமுறை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பேசி மகிழுங்கள். இது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.

ஒருவரை ஒருவர் பாராட்டுங்கள்

இல்லறத்தில் பாராட்டு பெறுவது என்பது வசிஷ்டர் வாயல் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கு சமம். கணவரிடம் இருந்து ஒரு சின்ன பாராட்டு கிடைத்து விட்டால் போதும் மனைவிக்கு கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்ததற்கு சமம். எனவே வாய்விட்டு பாராட்டுங்கள்.

அதுபோல் கணவரின் பிரத்யேகமான செயல்களை மனைவி பாராட்டுவதில் தவறில்லை. இது போன்ற சின்ன சின்ன சம்பவங்கள் தான் இல்லற பயணத்தை இனிமையானதாக மாற்றும்.



English summary
Sometimes life becomes just like a tradition or, a habit. But with a little effort change can be brought and life will get a new dimension and a new test. Are you anxious about your family life? If you want to win your husband’s heart at first you need to impress him. Follow some simple tips and succeed.
Story first published: Sunday, April 17, 2011, 12:20 [IST]

Get Notifications from Tamil Indiansutras