•  

நடிகை லிஸ் ஹர்லி செம ஹாட்-ஜொள்ளு விட்ட நியூசி. பிரதமர்

Liz Hurley
 
மெல்போர்ன்: இங்கிலாந்து நடிகையும், இந்திய வர்த்தகரான அருண் நய்யாரின் முன்னாள் மனைவியும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் வார்னேவுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்பட்டுவருமான லிஸ் ஹர்லியுடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி மகளிர் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ.

47 வயதாகும் கீ, காதலித்து மணம் புரிந்தவர். அவரது மனைவி பெயர் புரோனா. இவர்களுக்கு இளம் வயதில் ஸ்டெபி மற்றும் மேக்ஸ் என இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ரேடியோ பேட்டி ஒன்றில் அதீதமாக ஜொள்ளு விட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் கீ.

ரேடியோ பேட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது ஒரு விளையாட்டு வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பினால், எந்த விளையாட்டு வீரராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் முதலில் டைகர் உட்ஸ் என்றார். ஏன் என்று கேட்டபோது நிறையப் பணம் கிடைக்குமே என்றார். பின்னர் தொடர்ந்து, கூடவே வேறு சில பலன்களும் கூட கிடைக்கும் (உட்ஸின் காதல் லீலைகளைக் குறிப்பிடுகிறார்) என்றார் சிரித்தபடி.

பின்னர் ஷான் வார்னேவாக இருக்க விருப்பமா என்ற கேள்விக்கு நிச்சயம் என்று கூறிய கீ, அவராகவும் இருக்க விரும்புகிறேன் என்றார். பின்னர் தொடர்ந்து அவர் கூறுகையில், லிஸ் ஹர்லியுடன் இணைத்து வார்னே பேசப்பட்டார். ஹர்லி (இவருக்கு வயது 45) உண்மையில் மிகவும் கவர்ச்சிகரமானவர். எனது கனவு டேட்டிங் லிஸ்ட்டில் நிச்சயம் ஹர்லிக்கும் இடம் உண்டு என்றார் கீ.

தொடர்ந்து அவர் கூறுகையில், எனது டாப் 3 டேட்டிங் நபர்களில் ஹர்லிக்கு நிச்சயம் முக்கிய இடம் கொடுப்பேன் என்றும் ஜொள்ளு விட்டுள்ளார்.

கீயின் இந்தப் பேச்சுக்கு மனித உரிமை ஆர்வலர்களும், மகளிர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மனித உரிமை பிரசாரப் பெண்மணியான சூ கெட்ஜெலி கூறுகையில், மிகவும் அபத்தமாக பேசியுள்ளார் கீ. பொறுப்பான பதவியில் உள்ளவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்றார்.

சமீபத்தில் வார்னேவும், ஹர்லியும் ரகசிய உறவு வைத்துக் கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் நய்யார் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவரை விட்டு தான் பல மாதங்களுக்கு முன்பே பிரிந்து விட்டதாக ஹர்லி அறிவித்தார். இருப்பினும் சமீபத்தில் மீண்டும் நய்யாருடன் இணைய விரும்புவதாக ஹர்லி கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த ஹர்லியைப் பார்த்துதான் தற்போது கீ ஜொள்ளு விட்டுள்ளார்.

வாய்தான் பலருக்கு பல நேரங்களில் பஞ்சாயத்தைக் கூட்டி வைத்து விடுகிறது என்பதை கீ விவகாரம் நிரூபித்துள்ளது.

English summary
New Zealand's Prime Minister John Key has been slammed for describing British actress and estranged wife of Indian business tycoon Arun Nayar, Liz Hurley, as "hot". Women rights campaigners in New Zealand are infuriated over the 49-year-old Prime Minister's "sexist" comments on a radio sports show, online media reports said. In fact, the sexist row erupted after Key was asked on the radio show if he would like to be Australian cricket star Shane Warne. He replied: "Yeah, well, given his current liaisons with Liz Hurley. I reckon she's hot."
Story first published: Wednesday, February 2, 2011, 17:09 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more