•  

வாழ்வில் வெற்றி தரும் மந்திரப்புன்னகை

 
ஒருவரின் தோற்றத்தை வசீகரமாக மாற்றக்கூடியது அவரது புன்னகையே. நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்தான். அதனால் தானோ என்னவே புன்னகை இருக்க பொன் நகை எதற்கு என்று நம்முன்னோர்கள் கூறியுள்ளனர். புன்னகையின் மூலம் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.

வசீகரிக்கும் தோற்றம்

சிரிப்பானது நமது பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு பிறரிடம் உங்களை வசீகரமாகவும் காட்டும். சிரிப்பு என்பது வெறும் உதடுகளின் அசைவு மட்டுமல்ல, அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது எத்தனையோ பிரச்சினைகளையும் மீறி ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகின்றது. எப்படிப்பட்ட நபரையும் ஹேண்டில் செய்வதற்கு ஏற்ற மந்திரம் புன்னகை மட்டுமே. வீடாக இருந்தாலும் சரி பணியிடமாக இருந்தாலும் சரி புன்னகை பூத்திடுங்கள். கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக உங்கள் புன்னகை செயல்படும்.

உறவை வலுப்படுத்தும்

முசுடு உயரதிகாரியோ, அல்லது மூடியான கணவரோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை என்றாலும், நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும். பிறகு பாருங்கள் அவர்கள் உங்களை நடத்தும் விதமே வேறுமாதிரியாக இருக்கும்.

இடத்திற்கேற்ப சிரியுங்கள்

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவே தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

English summary
Smiling will improve your physical attractiveness. You will look more attractive, your face will be lifted, and you will look younger. You will look like a happy, confident, successful person. Smiling will improve your social life. Other people will smile back at you. People are attracted to happy people and the smile on your face will tell them that you are happy.
Story first published: Tuesday, October 11, 2011, 17:12 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more