•  

'லேட்'டானாலும் 'கிரேட்'டா...!

Sex
 
தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேரத்தில் நல்லவற்றுக்கு அடி கோலுவதை நாம் 'பிராக்டிகல்' வாழ்க்கையில் பார்க்கலாம்.

இது செக்ஸுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் செக்ஸ் உறவு என்பது பலவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத்தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும், அதீதமாகவும் இருக்கும். ஆனால் ஒரேயடியாக அதில் மூழ்கிப் போய் விடாமல், சற்று நிதானத்துடன் நடந்து கொண்டு, செக்ஸ் உறவை முறைப்படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழி கோலும் என்பது அவர்களின் கருத்து.

எடுத்த எடுப்பிலேயே 'டாப்' கியருக்குப் போனால் அது 'ஆக்சிடன்ட்'டில்தான் போய் முடியும். அதேசமயம், படிப்படியாக கியரை மாற்றி 'டாப்'புக்குப் போனால் 'எக்சலன்ட்' ஆக இருக்கும். திருமணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இருவரும், நல்ல புரிதலுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன்பும் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

இப்படி அவர்கள் சொல்வதற்கு முக்கிய காரணம் - எடுத்த எடுப்பிலேயே இருவரும் செக்ஸில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தினால், யாராவது ஒருவருக்கு திருப்தி ஏற்படாமல் போய் விட்டால், அது 'பார்ட்னர்' மீதான வெறுப்புணர்வை உள்ளூர வளர்த்து விடும். அது உடனடியாக வெளியே தெரியாது. ஆனால் விரைவிலேயே இருவருக்கும் செக்ஸ் வாழ்க்கையும் சரி, குடும்ப வாழ்க்கையும் சரி கசக்க ஆரம்பித்து விடும்.

எனவே இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே அன்பில் ஆழமாக வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

அமெரிக்காவில் இதுதொடர்பாக ஒரு சர்வே நடத்தினர். அதில், செக்ஸ் உறவை தாமதப்படுத்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திருமண வாழ்க்கை (அல்லது சேர்ந்து வாழுதல்) அதிக பாசப்பிணைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்ததாம்.

வலுவான திருமண பந்தம் என்பது இருவரது மணங்களும் ஒன்றாக இணைவதில்தான் உள்ளது. வெறுமனே உடல் சேர்க்கையில் இது சாத்தியப்படாது. உணர்வுப் பூர்வமாக, உள்ளப் பூர்வமாக இருவரும் முதலில் இணைய வேண்டும். நீ என்பதில் நானும் அடங்கும், நான் என்பதில் நீயும் அடங்கும் என்ற வைரமுத்துவின் வரிகளைப் போல இருவரும் ஒருவருக்குள் ஒருவர் புக வேண்டும். அதன் பிறகு உடல்களின் கூடலுக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் அது உண்மையான பந்தமாக இருக்க முடியுமே தவிர, செக்ஸ் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் எழுந்தால் அது நிச்சயம், கூடலுக்குப் பிந்தைய ஊடலுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.

சும்மாவா சொல்லி வைத்தார்கள் அந்தக் காலத்தில் - மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று. அது நிச்சயம் உண்மைதான். ஆனால் இந்த பழமொழியை பொய்யாக்க வேண்டுமானால் திட்டமிடுதலுடன் கூடிய உறவைக் கடைப்பிடிப்பது அவசியம்.

English summary
Having sex early in a relationship may lead to less satisfying marriages because couples can fail to develop important skills to communicate well and resolve conflicts. Why would rushing into intimacy impede marital happiness? People who quickly become intimate may end up marrying even if they're incompatible because they become entangled in a relationship that becomes difficult to end. A sexual relationship between two people is best learned, rather than simply graded. A good marriage - including the sex - is something that's built. It doesn't come prefabricated. Therefore, the take-home message is that sex is a powerful experience.
Story first published: Thursday, February 24, 2011, 15:11 [IST]

Get Notifications from Tamil Indiansutras