அந்த வகையில் தற்போது புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது நீண்ட தூரம் ஓடுபவர்கள், ஜாகிங் செல்பவர்களுக்கு நிறைவான, திருப்திகரமான, ஏன் கூடுதலான செக்ஸ் வாழ்க்கை கிடைப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.
வாழ்க்கையில் ஒருமுறை கூட ஓடாதவர்கள், ஜாகிங் செல்லாதவர்களை விட ரெகுலராக ஓடுபவர்கள், ஜாகிங் செல்பவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறதாம்.
இதற்காக ரெகுலராக ஜாகிங் செல்லும் 1000 பேரையும், ஓடவே யோசிக்கும் 1000 பேரையும் பிடித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டனர்.
இதில் ஜாகிங் செல்பவர்களில் பத்தில் ஒருவர் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் தினசரி 2 முறை செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.
ஒருமுறை கூட ஓடாதவர்களில் நான்கில் ஒருவர், மாதத்திற்கு ஒரு முறை அல்லது அது கூட இல்லாமல்தான் செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனராம்.
ஜாகிங் செல்லும் பெண்களில் ஐந்து சதவீதம் பேர் ஓடிக் கொண்டிருக்கும்போதே செக்ஸ் உறவு குறித்து நினைத்துப் பார்க்கின்றனராம். ஜாகிங் செல்லும் பெண்களில் பாதிப்பேர், உடலுறவின்போது தங்களது பார்ட்னர்களிடமிருந்து புதுப் புதுவிதமான உடலுறவு ஸ்டைலை எதிர்பார்ப்பதில் நேரத்தை செலவிடுகின்றனராம். மேலும் தங்களுக்கு விருப்பமான முறை எது என்பதை யோசிப்பதிலும் அவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
ஜாகிங் செல்வதால் தங்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிப்பதாகவும், கூடுதல் உற்காசத்துடன் படுக்கையில் செயல்பட முடிவதாகும் பலர் சொல்லியுள்ளனர்.
மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர், ஜாகிங் போய்க் கொண்டிருக்கும்போது தங்களுடன் ஜாகிங் வருவோருடன் செக்ஸ் குறித்துப் பேசுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஜாகிங் செல்வது உடலுக்கு மட்டுமல்ல, செக்ஸ் வாழ்க்கைக்கும் நல்லது என்கிறது இந்த சர்வே.
நீங்க என்ன சொல்றீங்க?