•  

இங்கிலாந்தில் பார்வையற்றோருக்கான செக்ஸ் புத்தகம்

Tactile Minds
 
பார்வையற்றோரும் செக்ஸ் புத்தகத்தைப் படித்து ரசிக்க வாய்ப்பு வந்து விட்டது.

அவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேக்டைல் மைன்ட்ஸ் என்று பெயரிடப்பட்ட புத்தகம் லண்டனில் வெளியாகிறது. லிசா மர்பி என்ற கனடா நாட்டு புகைப்படக்காரர் இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளார். இதன் விலை 150 பவுண்டுகளாகும்.

பிரெய்லி எழுத்துக்களால் இந்த புத்தகம் அமைந்துள்ளது. மேலும், ஆண் மற்றும் பெண்களின் நிர்வாணப் படங்களை கையால் தடவி உணரும் வகையில் இடம் பெற்றுள்ளன இந்தப் புத்தகத்தில்.

இதுகுறித்து டெய்லி டெலிகிராப் நாளிதழுக்கு மர்பி அளித்துள்ள பேட்டியில், இது புதிய முயற்சி. சாதனை முயற்சியும் கூட. ஏற்கனவே பிளேபாய் பத்திரிக்கை பார்வையற்றோருக்காக பிரெய்லி வார்த்தைகளால் அடங்கிய புத்தகத்தை வைத்துள்ளது.

ஆனால் அதில் படங்கள் கிடைய்து. எங்களது புத்தகத்தில் படங்களும் உண்டு என்றார் அவர்.

Story first published: Tuesday, April 13, 2010, 17:07 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras