•  

செக்ஸுக்கு 'சாக்லேட்' ஓ.கே.!

Sex
 
செக்ஸை விட சாக்லேட்டை வாயில் போட்டு மெல்லுவதையே இங்கிலாந்துப் பெண்கள் அதிகம் விரும்புகிரார்களாம்.

உங்களுக்கு செக்ஸ் பிடிக்குமா, சாக்லேட் பிடிக்குமா என்ற கேள்வியை இங்கிலாந்து நாட்டு இளம் பெண்களிடம் வைத்தபோது எனக்கு சாக்லேட்தான் வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கூறினார்களாம்.

ஒரு சர்வே மூலம் இந்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

செக்ஸ் மட்டுமல்ல, ஒயின், அழகு சாதனப் பொருட்கள் இவையெல்லாம் கூட இங்கிலாந்துப் பெண்களுக்கு இரண்டாம் பட்சம்தானாம். அதை விட அவர்களுக்கு முக்கியமானது சுவையோ சுவையாக இருக்கும் சாக்லேட்தானாம்.

கிட்டத்தட்ட 2000 பேரிடம் இதுகுறித்து ஆன்லைன் மூலம் கருத்து கேட்டுள்ளனர். அதில் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சாக்லேட் சாப்பிட்டு விடுவேன் என்று பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனராம்.

மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு சாக்லேட் குறித்து கனவெல்லாம் வருகிறதாம். அதேசமயம் செக்ஸ் குறித்த கனவு வருமா என்ற கேள்விக்கு 18 சதவீதம் பேர்தான் ஆமாம் என்று கூறியுள்ளனர்.

அதேசமயம், பத்தில் ஆறு ஆண்களுக்கு எப்போதுமே செக்ஸ் குறித்த கனவுதானாம். 11 சதவீதம் பேர் சாக்லேட் குறித்து கனவு காண்கிறார்களாம்.

சாக்லேட் கிடைப்பதாக இருந்தால் செக்ஸுக்கு குட்பை சொல்லவும் தயார் என்று ஐந்தில் ஒரு பெண் கூறுகிறார்.

செக்ஸ் மட்டுமல்லாமல் ஒயின், அழகு சாதனப் பொருட்கள், மேக்கப் பொருட்களை விட சாக்லேட்டுக்குத்தான் இங்கிலாந்துப் பெண்கள் உருகிப் போகிறார்களாம்.

தாங்கள் நினைக்கும் சந்தோஷமும், மெய்சிலிர்ப்பும் செக்ஸை விட சாக்லேட் மூலம்தான் உடனடியாக கிடைக்கிறது, விறுவிறுப்பாகவும் இருக்கிறது என்பது பெண்களின் கருத்து. அதைத்தான் இந்த சர்வே பிரதிபலிக்கிறது என்கிறார்கள் சர்வே நடத்திய நிறுவனத்தார்.

நம்மூர் பெண்கள் எப்படியோ...??

English summary
British women would rather have chocolate than wine, designer cosmetics and sex, says new research. A third of women confess that they dream about chocolate during the day compared with only 18 per cent who think about sex. More than one in five women say that they would kiss goodbye to their sex lives before chocolate. The study of 2,000 women was carried out by cereal bar firm Fibre Plus.
Story first published: Thursday, June 9, 2011, 17:35 [IST]

Get Notifications from Tamil Indiansutras