டொமைன் பெயர்களிலேயே மிகவும் பிரபலமானதாகவும், விலைமதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுவது செக்ஸ்.காம்.
முதன் முதலில் இந்த டொமைனை கடந்த 1994ம் ஆண்டு கேரி கிரெமன் என்பவர் பதிவு செய்து வைத்திருந்தார். இவர் மேட்ச்.காம் என்ற டேட்டிங் இணையதளத்தின் நிறுவனர் ஆவார்.
கடந்த 2006ம் ஆண்டு இந்த டொமைனை 14 மில்லியன் டாலர் விலை கொடுத்து எஸ்காம் எல்எல்சி நிறுவனம் வாங்கியது.
இந்த நிலையில் செக்ஸ்.காம் டொமைனை விற்க எஸ்காம் முடிவு செய்தது. இதையடுத்து நியூயார்க்கைச் சேர்ந்த வின்டல்ஸ் மார்க்ஸ்லேன் அன்ட் மிட்டன்டார்ப் நிறுவனத்தில் மார்ச் 18ம் தேதி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எஸ்காம் நிறுவனத்திற்கு எதிராக கலிபோர்னியா கோர்ட்டில் திவால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஏலம் ரத்தாகி விட்டது.
எஸ்காம் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.