சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகம் என்ற அமைப்பு இதுதொடர்பாக நடத்திய சர்வேயில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த சர்வே முடிவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும், நோபல் பரிசு வென்ற அமார்த்ய சென்னும் டெல்லியில் வெளியிட்டனர்.
ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 58,000 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2006ல் தொடங்கி 2008 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம்.
ஆய்வின் சில முக்கிய அம்சங்கள்...
கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆண்களில் 17 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். அதேசமயம், நகரங்களில் இது 10 சதவீதமாக உள்ளதாம்.
நகர்ப்புற பெண்களில் 2 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு கொள்கிறார்களாம். அதுவே கிராமப்புறங்களில் 4 சதவீதமாக உள்ளதாம்.
கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நகர்ப்புற ஆண் பெண்களும் சரி, கிராமப்புறத்தினரும் சரி பாதுகாப்பற்ற முறைகளிலேயே அதில் ஈடுபடுகின்றனர். பலருடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் அதிகமாகவே உள்ளதாம்.
19 வயதுக்குட்பட்டோரில் (நகரம்- கிராமம்) 8 சதவீதம் பேர் செய்துதான் பார்ப்போமே என்பதற்காக செக்ஸில் ஈடுபடுகின்றனராம்.
அதேபோல மனைவியை அடிப்பதில் தவறே இல்லை என்ற கருத்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களிடம் நிலவுகிறதாம். கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளனராம்.
தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர மனைவியை அடிப்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்று கூறினராம். ஆந்திராவில் இது மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் மனைவியை அடிப்பது எங்களது உரிமை என்று கூறியுள்ளனராம்.
இந்த ஆய்வில், இளம் பெண்களிடையே, கருத்தரிப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பலருக்கு எய்ட்ஸ், எச்ஐவி தடுப்பு முறைகள் குறித்து தெரியவே இல்லையாம்.